தீ சுந்தர்.சி!

By Staff

ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் தீ. இப்போது அதே பெயரில் ஆனால் வேறு கதையில் சுந்தர்.சி. நடிக்க புதுப் படம் ஒன்று உருவாகவுள்ளது.

முழு நேர ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. தலைமகன் பிச்சுக்கிட்டுப் போனாலும் போனது, நானும் இனிமே ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்து விட்டார் சுந்தர்.சி.

இடையில் ரெண்டு என்ற படத்தை இயக்கிய சுந்தர்.சி. இனிமேல் வருஷத்துக்கு 3 படம் ஹீரோவாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

தற்போது கோபிகாவுடன் சேர்ந்து வீராப்பு என்ற படத்தில் பலே பார்ட்டியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கோபிகா டீச்சரம்மா கேரக்டரில் வாய்த்துடுக்கான பெண்ணாக வருகிறாராம். சுந்தர்.சி. அடாவடிப் பேர்வழியாக திறமை காட்டுகிறாராம்.

இதைத் தொடர்ந்து தீ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சுந்தர்.சி. ஸ்ரீமூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக ராகினி என்ற பெண் அறிமுகமாகிறார். இவர் மலேசிய வாழ் தமிழ் பெண்களுக்கான அழகிப் போட்டியில் பட்டம் வென்றவாராம்.

அநீதியைக் கண்டால் தீ போல சுட்டெரிக்கும் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் சுந்தர்.சி. அப்ப, அந்தக் கால விஜயகாந்த் படம் போல தீ இருக்கும் என்று நம்பலாம்.

படத்தை உள்ளூரில் எடுத்து விட்டு பாடல்களுக்காக பிரான்ஸ், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்குப் பறக்கவுள்ளனராம். ஜி.கிச்சாதான் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிம்ரனை வைத்து ஒரு படத்தை இயக்கியவர்.

அநீதியை மட்டும் பொசுக்குங்க, அநியாயத்துக்கு தியேட்டருக்கு படம் பார்க்க வருகிற ரசிகர்களையும் வசனத்தால் பொசுக்கிடாதீங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X