சன்டேன்னா வலை டீமுக்கு 'தல' பிரியாணி தான்
சென்னை: அஜீத் குமார் ஞாயிற்றுக்கிழமைகளில் வலை படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுக்கிறாராம்.
அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் உள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுள்ளது. படத்தில் அஜீத் கார், பைக், போட் ஆகிவற்றில் சாகசம் செய்துள்ளார்.
அஜீத் குமார் சூப்பரா பிரியாணி சமைப்பார் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் சொல்லி பெருமைப்பட்டதுண்டு. மங்கத்தா குழுவினர் அஜீத் கையால் பிரியாணி சாப்பிட்டனர். தற்போது வலை படக்குழுவினருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

காயத்துடன் பணியாற்றும் அஜீத்
அஜீத் குமாருக்கு வலை படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியும் அவர் ஷூட்டிங் முடியட்டும் என்று கூறிவிட்டார். இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

சன்டேன்னா பிரியாணி தான்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வலை படக்குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே பிரியாணி சமைத்துப் போடுகிறாராம்.

'தல' பிரியாணிக்கு தனி ருசி
அஜீத் சமைக்கும் பிரியாணிக்கு தனி ருசி இருப்பதாக அதை சாப்பிட்டவர்கள் சொல்கிறார்கள். ஹைதராபாத் மற்றும் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம். அஜீத் குமார் செய்யும் பிரியாணியில் இந்த இரண்டு வகை சுவையும் இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











