சபாஷ் சரியான போட்டி.. காலையில் சிம்பு, இரவு தனுஷ்.. வைரலாகும் வொர்க்கிங் ஸ்டில் புகைப்படங்கள்!
சென்னை: பல ஆண்டுகளாக ஹிட் கொடுக்காமல் இருந்தாலும் மாநாடு என்கிற ஒரே படம் மூலமாக சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.
வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் சூடுபறக்க நடக்கிறது என்பதை வெளிப்படுத்த கையில் துப்பாக்கி உடன் இருக்கும் மாஸ் போட்டோவை நேற்று காலையில் சிம்பு வெளியிட்டார்.
அதே நேரத்தில் சிம்புவுக்கு போட்டியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரேமேன் வொர்க்கிங் ஸ்டில்லை நேற்று இரவு ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

கம்பேக் கொடுத்த சிம்பு
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுக்க முடியாமல் நீண்ட ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார் நடிகர் சிம்பு. சுமாராக படங்கள் ஓடி வந்த நிலையில், அப்படியே டிராவல் பண்ண அவருக்கு படங்கள் சொதப்ப ஆரம்பித்தன. இந்நிலையில், தோல்விகளில் இருந்து மீண்டும் கம்பேக் கொடுக்க மாநாடு படம் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்து தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சிம்பு.

கெளதம் மேனன் காம்போ
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து லாக்டவுன் நேரத்தில் மீண்டும் கெளதம் மேனன் உடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் நடித்து இருந்தார் நடிகர் சிம்பு. இந்நிலையில், உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.

கையில் துப்பாக்கியுடன்
ரெட் கார்டு பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு, அந்த பிரச்சனை நீங்கிய பின்னர் மீண்டும் தொடங்கியது. மாநாடு படத்தின் ரிலீஸ் காரணமாக ஷூட்டிங் சற்றே தாமதமான நிலையில், மீண்டும் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டதாக கையில் துப்பாக்கி உடன் செம மாஸாக ஒரு புகைப்படத்தை நேற்று நடிகர் சிம்பு வெளியிட்டு வைரலாக்கினார்.

ஹாலிவுட் வரை
கடந்த பத்தாண்டுகளில் தேசிய விருதுகள், பாலிவுட் படங்கள் என வேற லெவலுக்கு தன்னை உயர்த்திக் கொண்ட நடிகர் தனுஷ் தற்போது அவெஞ்சர்ஸ் நடிகர்களுடன் ஹாலிவுட்டில் கிரேமேன் படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் பங்கேற்றுள்ள புகைப்படத்தை நேற்று இரவு வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video

தொடரும் போட்டி
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிம்பு - தனுஷ் போட்டி தான் கோடம்பாக்கத்தில் என ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், காலையில் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை போட்ட நிலையில், இரவு நடிகர் தனுஷ் வொர்க்கிங் ஸ்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என கம்பேர் பண்ணி சபாஷ் சரியான போட்டி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











