1,000 பிரபலங்கள்.. பட்டு வேட்டி சட்டையில் ஸ்டைலா வந்த ரஜினி..பணத்தை வாரிஇறைத்த அம்பானி!

ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தம்பதிக்கு இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷா இரட்டையர்கள் ஆவர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் ஆனந்துக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

Super Rajinikanth family attending Anant Ambani and Radhika Merchant

ஜாம்நகர்: இதற்காக மார்ச் 1ந் தேதியில் இருந்து நேற்று வரை ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது. இதன் காராணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 ஏக்கர் பரப்பளவில் காடுகள் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. மேலும், ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் வந்தாரா என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கியது. இந்த இடத்தில் தான், ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஜாம்நகரின் விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு,தினமும் 140 விமானங்கள் ஜாம்நகரில் வந்திறங்கின.

மூன்று நாள் திருவிழா: மூன்று நாள் நடைபெற்ற இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை காக்டைல் பார்ட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும்அவருக்கு ரூ.75 கோடி செலவிடப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Super Rajinikanth family attending Anant Ambani and Radhika Merchant

பாரம்பரிய உடையில்: மூன்றாம் நாளான நேற்று வந்தாராவனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டியது. இதில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் இருவருமே சிவப்பு நிறத்தில் மேட்சாக உடை அணிந்து வந்திருந்தனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Super Rajinikanth family attending Anant Ambani and Radhika Merchant

பல பிரபலங்கள்: மேலும், ப்ரீ வெட்டிங்கில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட்,ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப்,இயக்குநர் அட்லி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X