இன்னும் ஒரு வாரத்தில் மாஸான அப்டேட்… அண்ணாத்த படக்குழு வெளியிட்ட தகவல் !
சென்னை : அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த மாஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினியின் அண்ணாமலை, முத்து, படையப்பா வரிசையில் அண்ணாத்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கும் அண்ணாத்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்ணாத்த
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து நடித்து வருகின்றனர். சென்னை மற்றும் ஹைதரபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை முடித்த சிவா அண்ட் டீம் இப்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் லக்னோவில் நடத்தி வருகின்றனர்.

நவம்பரில் ரிலீஸ்
அண்ணாத்த படம் நவம்பர் 4 தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் பரபரக்கிறது. ரஜினி, மீனா உள்பட பலரும் ஷூட் செய்யப்பட்ட போர்ஷன்கள் வரை டப்பிங் பேசி முடித்துவிட்டார்கள். குஷ்பு இப்போது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். சூரி படப்பிடிப்பில் பிசியாகிவிட்டதால் இன்னும் அவர் டப்பிங் பேசவில்லையாம்.

லக்னோவில் படப்பிடிப்பு
பேட்டயில் முழுக்க முழுக்க லைவ் லொக்கேஷனில் நடித்து முடித்த ரஜினி, கொரோனா சூழலால் இந்த படத்தில் முழுக்கவே செட்டுக்குள் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஹைதராபாத்தில் முக்கால் வாசி படத்தின் ஷூட் நடந்து முடிந்தாலும், கடைசி ஷெட்யூலை கொல்கத்தாவில் எடுக்க நினைத்தனர். அங்கே கொரோனா பயம் அதிகம் இருப்பதால், இப்போது லக்னோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விரைவில் டீசர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்
வலிமை திரைப்படத்திற்கு நடிகர் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டது போல், நடிகர் ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த படத்திற்கு அப்டேட் கேட்டு, பர்ஸ்ட் லுக் வெளியிடகோரி அண்மையில் திண்டுக்கல் நகரில் மெகா போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம்
நடிகர் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் வெற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரி, வெற்றியுடன் இயக்குனர் சிவாவும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications