Jailer 2: பொங்கல் ஹாலிடே ஓவர்.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கிற்காக நெல்சன் உடன் கொச்சி பறந்த சூப்பர் ஸ்டார்!
சென்னை: இந்த ஆண்டு விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை பொங்கல் விடுமுறையில் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை பாக்ஸ் ஆபீஸில் பஞ்சர் பண்ண வேண்டும் என ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பிய நிலையில், படம் இன்னமும் வெளியாகவில்லை. எப்போது வந்தாலும் படம் வசூல் சாதனை படைக்கும் என்பதெல்லாம் எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை.
பகவந்த் கேசரி ரீமேக்காக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் 10 நாள் விடுமுறையை மிஸ் செய்த நிலையில், பிப்ரவரி மாதம் வெளியானால் கூட பெரிதாக வசூல் சாதனை படைப்பது சிரமம் தான்.

இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் படமாக ஜெயிலர் 2 மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக கொச்சி பறந்துள்ளார்.
பொங்கல் விடுமுறை: புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று ஓய்வெடுத்து ரசிகர்களை தனது வீட்டின் முன் வந்து சந்தித்த காட்சிகள் வைரலாகின. சில சினிமா விழாக்களுக்கும் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாக்கியராஜ் 50வது ஆண்டு நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு கிளம்பி விட்டார்.
75 வயதிலும் குறையாத எனர்ஜி: பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வேலை பார்க்க வேண்டுமா என இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தன்கள் மெய்யழகன் மீம்ஸ் போட்டு வரும் நிலையில், 75 வயதிலும் செம எனர்ஜியாக இந்த ஆண்டு ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கிறேன் பாருங்க என கொச்சிக்கு பறந்துவிட்டார் சூப்பர் ஸ்டார். உழைப்பின் மதிப்பு உழைப்பாளி ரஜினியை விட யாருக்கும் அதிகம் தெரிந்துவிடும் என்பது போலத்தான் உள்ளது.
நெல்சன் உடன் விமானத்தில்: விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், சிவாங்கி அம்மா விமானத்தில் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங்: கடந்த ஆண்டு கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அந்த படம் தான் 500 கோடி வசூலை கோலிவுட்டுக்கு பெற்றுத் தந்தது. இந்நிலையில், ஜெயிலர் 2 மூலம் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தை ரஜினிகாந்த் கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஜெயிலர் முதல் பாகமே 600 கோடி வசூல் செய்த நிலையில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என பல கேமியோக்கள் உள்ள ஜெயிலர் 2 வரலாறு படைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











