சூப்பர் ஸ்டார் வீட்டுப் பொங்கல்.. லதா ரஜினிகாந்தை பாடாய் படுத்திட்டாங்க.. கோலத்தில் அதை கவனிச்சீங்களா?
சென்னை: தை பொங்கல் விழா வெகு சிறப்பாக தமிநாட்டு மக்களாலும் உலகத் தமிழர்களாலும் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு மாட்டுப் பொங்கலை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று பிரபலங்கள் வீட்டுப் பொங்கல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுப் பொங்கல் குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் வீட்டுப் பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த வீடியோவில், சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் பொங்கல் வைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட அவரது குடும்பத்தினர் கையில் தட்டும் ஸ்பூனும் வைத்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல் வீட்டு வாசலில் கோலம் போட்டு, கரும்பு நட்டு, டிசைன் செய்யப்பட்ட மண் பானைகளை அடுக்கி வைத்து அவைகளுக்கு மத்தியில் குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்ததையும் பகிர்ந்துள்ளார். இதில் கோலத்தில் சூப்பர் ஸ்டார் என்பதைக் குறிக்கும் வகையில் S என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











