சிவாஜிக்கு முன்னாடியே அப்படி நடித்தவர் தான் ரஜினிகாந்த்.. பிட்டு பட இயக்குநருக்கு என்ன தெரியும்?

சென்னை: ஸ்லோ மோஷன் இல்லை என்றால் ரஜினிகாந்த் எல்லாம் நடிகராக இருப்பாரா என்றே தெரியவில்லை என பேட்டி ஒன்றில் நக்கலாக பேசி இயக்குநர் ராம் கோபால் வர்மா சிரித்ததை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஸ்லோமோஷன் இல்லாத காலத்திலேயே ரஜினிகாந்த் தனது நடிப்பால் எப்படி எல்லாம் உயர்ந்தார் என பழைய படங்கள் முதல் கடைசியாக ஜெயிலர் படத்தில் சோபாவில் அமர்ந்துக் கொண்டு சிரிக்கும் காட்சி வரை ஷேர் செய்து ராம் கோபால் வர்மாவை விளாசி வருகின்றனர்.

74 வயதிலும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துக் கொண்டு இந்தியாவிலேயே பல முன்னணி நடிகர்களே சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சண்டை போட காரணமே பாக்ஸ் ஆபீஸ் போட்டி தான்.

Rajinikanth Ram Gopal Varma Coolie

இந்நிலையில், 62 வயதாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மா ரஜினிகாந்த் பற்றி படுமோசமான விமர்சனத்தை போகிற போக்கில் பேட்டி ஒன்றில் வைத்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால்: சின்னக் குழந்தைகள் மட்டுமின்றி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கானிடமே சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் ரஜினிகாந்த் தான் என அடுத்த நொடியே தயக்கமின்றி சொல்வார்கள். அமிதாப் பச்சனே வேட்டையன் படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்தின் ஆளுமையை பாராட்டி பேசியிருந்தார். ஆனால், பொறாமை காரணமாகவே ராம் கோபால் வர்மா ரஜினிகாந்தை அப்படி விமர்சித்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிவாஜி முன்னாடியே தூள் கிளப்பியவர்: எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் இருக்கும்போதே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஸ்டைலால் உருவாக்கியவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், பைரவி, ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி என அந்த காலத்திலேயே பல படங்களில் தனது நடிப்புத் திறமையை காட்டித்தான் சினிமாவில் கொண்டாடப்பட்டார் ரஜினிகாந்த். சிவாஜி கணேசன் முன்னாடியே ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைபேன், நட்சத்திரம், உருவங்கள் மாறலாம், படிக்காதவன், விடுதலை, மாவீரன் மற்றும் படையப்பா என பல படங்களில் நடித்துள்ளார்.

பிட்டு பட இயக்குநர்: "ஸ்லோ மோஷன்னா என்னன்னு தெரியாத காலத்துலயே நடிப்புல புது ஸ்டைலை உருவாக்கி ஸ்பீடா முன்னேறியவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாருக்கு ஸ்பீட் மோஷனும், ஸ்லோ மோஷனும் தெரியும். அது பிட்டு பட டைரக்டருக்கு எப்படி தெரியும்?" என ராம் கோபால் வர்மாவுக்கு எதிரான விமர்சனங்களை நெட்டிசன்கள் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X