Rajinikanth: அலறவிட்ட தலைவா.. என்ன ஒரு லுக்.. ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வரும் நிலையில் ரஜினியை பார்க்க படப்பிடிப்பு நடந்து வரும் இடத்தில் ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பானது. இருந்தாலும் ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் காரில் இருந்தபடியே கையசைத்ததால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
கடந்தாண்டு ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்து வசூல் மன்னன் என்கிற பட்டத்தையும் வாங்கி கொடுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் டிஎஸ்பி கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், அர்ஜூன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களிடம் பல பாராட்டுகளை வாங்கி கொடுத்து ஒரு மிகச்சிறந்த படம் என்கிற அளவிற்கு பெயர் எடுத்தது. அதே போல இப்படமும் ரஜினியின் கேரியரில் பெஸ்ட் ஆப் தி மூவி என்று சொல்லும் அளவிற்கு கருத்துள்ள படமாக இருக்கப் போகிறது என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது.
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்: ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதற் கட்டபடப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தேங்காய்திட்டு பழையதுறை முகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
அலறவிட்ட தலைவா: தற்போது, புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம் மற்றும் தெப்பக்குளம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நடந்து வருவதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வளாகத்தில் ஒன்று கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷூட்டிங் முடித்துவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்த் காரில் இருந்தபடியே கையசைத்தார். இதனால் ரசிகர்கர் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











