ரஜினிகாந்தின் அடுத்த படம் என்ன?... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியானது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ்,பாண்டியராஜ், லிவிங்ஸ்டன் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

பல விமர்சனங்கள்

பல விமர்சனங்கள்

அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். வழக்கமாக சிறுத்தை சிவா திரைப்படத்தில் இருக்கும் அதே சென்டிமென்ட் காட்சிகள் அண்ணாத்த திரைப்படத்திலும் இருந்தது. கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் இத்திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்தனர்.

புது பட அறிவிப்பு

புது பட அறிவிப்பு

இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராக உள்ளதாகவும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளியாகும் என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதனால், புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கதை தயார் செய்யும்படி

கதை தயார் செய்யும்படி

தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரீது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனிஆகியோர் நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரியஅளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டி தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

அதேபோல, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் பீஸ்ட் படப்பிடிப்பு முடியாததால் ரஜினி படத்தை உடனே தொடங்குவது முடியாத காரியம் என்கின்றனர்.

Recommended Video

Kamal Hassan -ஐ தொலைபேசி மூலம் அழைத்த Rajinikanth | Kamal Current Health Status
கார்த்திக் சுப்புராஜூடன்

கார்த்திக் சுப்புராஜூடன்

பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தகவலும் பரவி வருகிறது. ரஜினியின் புதிய படம் மற்றும் இயக்குனர் பற்றிய அறிவிப்பு ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X