ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!

சென்னை: அண்ணாத்த படம் தோல்வியை தழுவிய நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இன்னொரு படத்தை பண்ணி தருகிறேன் என ரஜினிகாந்த் வாக்கு கொடுத்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படத்தின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.

ஆனால் கடைசியாக அனிருத் இசையில் வெளியான பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. மேலும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது படத்துக்கு பெரிய பலமாக அமைந்து ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்தது.

Super Star Rajinikanth will receive 300 crores for Coolie movie

ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

சந்தோசத்தில் சன் பிக்சர்ஸ்: தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் சொதப்பி வந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் தந்த வெற்றியால் கலாநிதி மாறன் ரொம்பவே ஹேப்பி ஆகிவிட்டார். சொகுசு கார், காசோலை என ரஜினிகாந்த், நெல்சன், அனிருத்துக்கு வரிசையாக கொடுத்து மாஸ் காட்டி விட்டார். இந்நிலையில், கூலி படத்துக்கு ரஜினிகாந்துக்கு பெரிய கூலி கொடுக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் சம்பளம்: கூலி படத்துக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு 260 முதல் 280 கோடி சம்பளம் தற்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓடிடி பிசினஸே 250 கோடி ரூபாய் என சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் பிசினஸ் ஆகி வரும் நிலையில், கூலி படத்துக்கு எவ்வளவு கூலி கொடுத்தாலும் வசூலை வாரி விடலாம் என பக்கா ஸ்கெட்ச்சை கலாநிதி மாறன் போட்டிருப்பதாக கூறுகின்றனர். வேட்டையன் படம் வெற்றி பெற்று மேலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்தால் 300 கோடி ரூபாய் வரை சம்பளம் உயரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர்கள் தூக்கம் போயிடுமே: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயதில் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு நடிகரும் வாங்காத அளவுக்கு அவர் சம்பளம் வாங்குகிறார் என்றாகிவிடும். இதுமட்டும் உண்மையென தெரிந்தால் பல நடிகர்களின் தூக்கம் போய் விடும் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர். இது உண்மையா? அல்லது உருட்டா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. அதிகபட்சமாக 200 கோடி வரை சன் பிக்சர்ஸ் சம்பளம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X