எனக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அளிக்கும் விழாவுக்கு மதுரைக்கு வாங்கண்ணா: நடிகர்களை அழைக்கும் விஜய்

By Siva

சென்னை: மதுரையில் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும் விழாவுக்கு வருமாறு விஜய் சக நடிகர்களுக்கு போன் செய்து அழைப்பு விடுக்கிறாராம்.

தமிழகத்தில் உள்ள பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இதையடுத்து கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஜய் அந்த வாரப் பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்.

மதுரையில் விழா

மதுரையில் விழா

விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேது மதுரையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

அழைப்பு

அழைப்பு

மதுரை விழாவுக்கு வருமாறு விஜய்யின் சார்பாக அவரது பி.ஆர்.ஓ.வும், இயக்குனர் செல்வபாரதியும் நடிகர், நடிககைகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

செல்வபாரதியா?

செல்வபாரதியா?

விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய், வசீகரா ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த செல்வபாரதி. கோலிவுட் பிரபலங்களை விழாவுக்கு அழைக்கும் பொறுப்பை அவரிடம் அளித்துள்ளார் விஜய்.

வருகிறார்கள்

வருகிறார்கள்

விழாவுக்கு வருவதாக யார், யார் உறுதி அளித்துள்ளார்கள் என்ற விவரங்களை அவ்வப்போது விஜய் கேட்கிறாரராம்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

சில பிரபலங்கள் விஜய்யின் விழாவுக்கு நாங்கள் செல்கிறோம் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன்

செல்போன்

விழாவுக்கு வர தயக்கம் காட்டுபவர்களுக்கு விஜய்யே போன் செய்து மதுரைக்கு வாங்கண்ணா என்று அன்புடன் அழைக்கிறாராம்.

தேசிய அளவில்

தேசிய அளவில்

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர், நடிகைகள் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X