Rajinikanth 75 - ரஜினிக்கு கிரிக்கெட்டைவிடவும் பிடித்த விளையாட்டு என்ன தெரியுமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: ரஜினியின் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக ஜெயிலர் 2வில் நடித்துவரும் அவர்; இதை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இதன் இயக்குநர் யார் என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சூழல் இப்படி இருக்க இன்னும் சில நாட்களில் அவரது 75வது பிறந்தநாள் வரவிருப்பதால் அதனை கொண்டாட ரஜினி ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.
ரஜினிகாந்த் கடந்த 50 வருடங்களாக நடித்துவருகிறார். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளை திரைத்துறையில் பார்த்துவிட்டாலும்; அவர் மீது இன்றைய தலைமுறையினரும் காதல் கொண்டிருக்கிறார்கள். சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா செலிபிரிட்டிகளும்கூட தலைவரின் விசிறிகள்தான். அதனால்தான் அவர் நடிக்கும் படங்களில் அவரையே புகழ்ந்து பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
அப்செட்டில் ரஜினி: அவரது கரியரை பொறுத்தவரை தோல்வி படங்கள் கொஞ்சம்தான் கொடுத்திருக்கிறார். அந்த தோல்வி படங்களில் கூலி படத்துக்கு முக்கியமான இடம் உண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் லோகி சொதப்பிவைத்துவிட்டாஅர். இதனால் ஃபெயிலியர் ஆனது மட்டுமின்றி மிகப்பெரிய ட்ரோலையும் படம் சந்தித்தது அவரை கண்டிப்பாக அப்செட் ஆக்கியிருக்கும்.

அடுத்த படங்கள்: கூலி படத்துக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். அதனை முடித்துவிட்டு கமலின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் சுந்தர் அதிலிருந்து வெளியேற; புதிய இயக்குநரை தேடும் பணி தொடங்கியிருக்கிறது. அநேகமாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் படத்தை இயக்கலாம் என்று தெரிகிறது.
ரஜினி 75: இது ஒருபக்கம் இருக்க இந்த ஆண்டு ரஜினிக்கு சிறப்பு வாய்ந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இந்த வருடத்தோடு ரஜினி திரைத்துறைக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைகின்றன. அதேபோல் அவருக்கு இந்த டிசம்பர் 12ஆம் தேதி வந்தால் 75ஆவது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ரஜினி ரசிகர்கள் 12ஆம் தேதியை திருவிழா போல் கொண்டாடுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.
ரஜினிக்கு பிடித்த விளையாட்டு: அவரது பிறந்தநாள் இன்னும் சில நாட்களில் வரவிருப்பதால் அவர் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் அவருக்கு பிடித்த விளையாட்டு குறித்து பார்க்கலாம். அதாவது பெரும்பாலான இந்தியர்களுக்கு விருப்ப விளையாட்டாக இருப்பது கிரிக்கெட். ஆனால் கிரிக்கெட்டைவிடவும் ரஜினிக்கு கால்பந்தும், கூடை பந்தும்தான் பிடிக்கும். அதிலும் கூடை பந்து பார்ப்பது மட்டுமின்றி விளையாடவும் செய்திருக்கிறார். ஆனால் கால்பந்து பார்க்க மட்டும்தான் செய்வாராம். பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் பிடிக்கும் தேசத்தில்; ரஜினிக்கு வித்தியாசமாக கூடை பந்து பிடித்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.


Click it and Unblock the Notifications











