சூப்பர்ஸ்டார் எங்கிட்ட Sorry கேட்டார்.. ஹ்ரித்திக் ரோஷன் சொன்ன தரமான த்ரோபேக் ஸ்டோரி!
சென்னை: நடிகை மீனா மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்தி படத்தில் ரஜினிகாந்த் உடன் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
தனுஷ், விஜய்சேதுபதி எல்லாம் இப்போ தான் பாலிவுட்டில் தலை காட்டி வருகின்றனர். இதையெல்லாம் அப்பவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அசால்ட்டாக செய்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அங்கேயும் அவர்களின் கை ஓங்குகிறது என தெரிந்த நிலையில், பல பிரச்சனைகளும் வெடித்துள்ளன. அதன் பின்னர் தான் கோலிவுட்டே போதும் என இருவரும் இங்கேயே தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
பகவான் டாடா: ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பில் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் 1986ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி வெளியானது பகவான் டாடா திரைப்படம். அந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி லீடு ரோலில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரம்: பாலிவுட்டில் அடுத்து ஃபைட்டர் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க காத்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் அந்த படத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் பாலகனாக ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த நினைவுகளை சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஹ்ரித்திக் ரோஷன் நினைவு கூர்ந்த வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஸாரி சொன்ன சூப்பர்ஸ்டார்: படப்பிடிப்பின் போது என்னை கம்ஃபோர்ட் ஜோனுக்குள் கொண்டு வர நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென "ஸாரி ஸாரி" என சொன்னது இன்னமும் நினைவு இருக்கு. அவ்ளோ பெரிய சூப்பர்ஸ்டார் ஒரு குழந்தை நட்சத்திரத்தையும் கவனித்து ட்ரீட் செய்யும் விதம் எல்லாம் அவரிடம் மட்டும் தான் கற்றுக் கொள்ள முடியும். எப்பவுமே எனக்கு ரஜினி சார் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு எனக் கூறியுள்ளார்.
ஃபைட்டர்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி அபார சாதனை படைத்தது. இந்த ஆண்டு ஷாருக்கானின் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி 1000 கோடி வசூலை சாத்தியம் ஆக்கினார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஃபைட்டர் படம் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











