Rajini Ooty: ரஜினிகாந்தின் அடுத்த பிளான்.. ஊட்டியில் ஓய்வு!

சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தொடர்ந்து பிஸியான படப்பிடிப்பு மத்தியில் சிறிய ஓய்வை எடுத்துக் கொள்வதற்காக மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்றுள்ளார். அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வந்தபோது, ஹோட்டல் நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்தை நேரில் கண்ட ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ரஜினியின் நடிப்பில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்த போதும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

Super star Rajinikanth Ooty

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 'கூலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரசிகர்களிடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், மிருணா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுதவிர ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான தலைவர் 173 படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Super star Rajinikanth Ooty

ஊட்டியில் ஓய்வு: "ஜெயிலர் 2" படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஜினிகாந்த், தொடர்ந்து நடைபெற்ற வந்த படப்பிடிப்புக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுப்பதற்காக ஊட்டி வந்துள்ளார். இந்த ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது திரைப்படப் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார். ரஜினிகாந்தை நேரில் கண்ட ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டியில் அவர் ஓய்வு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X