கரடு முரடான மலைப்பாதையில் நடந்த ரஜினிகாந்த்.. பாபாஜி குகையில் தியானம்!

சென்னை: வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்ட ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் வழிபாடு செய்தார். தற்போது அவர் பாபாஜி குகைக்கு நடந்து சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் அவர் மே 29 ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்ட போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? பாஜக வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினி, தயவு செய்து அரசியல் கேள்விகள் வேண்டாம் என்றார். இதையடுத்து,பயணம் குறித்து பேசிய ரஜினி, இமயமலையில் உள்ள கேதார்நாத் ,பத்ரிநாத் மற்றும் பாபா குகைக்கு செல்ல இருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வேன், அதே போல் இந்த ஆண்டும் செல்கிறேன் என்றார்.

Superstar Rajinikanth Himalayas

இமயமலையில் ரஜினிகாந்த்: இதையடுத்து, இமயமலை சென்ற ரஜினிகாந்த், வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் சந்தன நிறத்தில் சால்வை ஒன்றை மேலே போட்டுகொண்டு கருப்பு கூலிங் கிளாஸுடன் எளிமையாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இதையடுத்து, இதையடுத்து, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் வழிபாடு செய்தார். மேலும், காவி உடையில் ரஜினிகாந்த் துறவி ஒருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வேட்டையன் திரைப்படம் குறித்து பேசும்பொழுது அந்த திரைப்படம் தசரா பண்டிகையன்று வெளியாக உள்ளதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

கரடுமுரடான பாதையில்: தற்போது ரஜினிகாந்த், பாபாஜி குகைக்கு சென்று அங்குள்ள கரடு முரடான பாதையில் கையில் கைத்தடி ஒன்றைவைத்துக்கொண்டு சளைக்காமல் நடந்து சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கரடு முரடான பாதையில் ரஜினிகாந்த் நடந்து வந்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் இன்றோ அல்லது நாளை மறுதினமே தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X