இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் - தலைவர்கள், கலைஞர்கள் வாழ்த்து

By Shankar

சென்னை: இந்திய சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து ரசிகர்களால் உலக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினியின் பிறந்த நாள் இன்று.

கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத் தளங்களிலும், தொலைக்காட்சிகள் மூலமும் நேரிலும் வாழ்த்துகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், அதிகாலை 12 மணியிலிருந்தே.

இன்று காலையிலிருந்து ரஜினிக்கு பல்வேறு தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் போனில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று பெங்களூரில் உள்ள ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். பாஜகவின் மூத்த தலைவர் எல்கே அத்வானி, நிதின் கட்காரி, தமிழக பாஜக தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் ஆகியோர் போன் மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திரையுலகினர்

திரையுலகினர்

திரையுலகினரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். ரஜினியின் திரையுலக குரு கே பாலச்சந்தர், எஸ் பி முத்துராமன், நண்பர்கள் கமல் ஹாஸன், கேஎஸ் ரவிக்குமார் என அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் இன்று காலையிலிருந்து ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று காலை ரஜினிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

64வது பிறந்த நாள்

64வது பிறந்த நாள்

ரஜினி பிறந்தது 12.12.1950ல். இது அவருக்கு 64வது பிறந்த நாள். முன்பெல்லாம் பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி. ஆனால் 90-களில் இந்த வழக்கத்தை நிறுத்திவிட்டார். தன் பிறந்த நாளன்று மட்டும் அவர் ஊரில் இருக்க மாட்டார். இதை முன்கூட்டியே ரசிகர்களுக்கு அறிவித்தும்விடுவார்.

12.12.12

12.12.12

கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் அபூர்வ தேதியான 12.12.12-ல் வந்தது. நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் தேதி இது. எனவே அன்று ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்த நாள் ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழா கூட்டத்திலும் கலந்து கொண்டு இரட்டை சந்தோஷத்தைக் கொடுத்தார்.

பெங்களூரில்

பெங்களூரில்

இந்த ஆண்டு பிறந்த நாளன்று ரஜினி பெங்களூரில் தன் வீட்டில் இருக்கிறார். அவருடன் நெருங்கிய நண்பர்கள் மட்டும் உள்ளனர். நாளைதான் சென்னை திரும்புகிரார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X