5 கோடியை திருப்பிக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. கூடுதல் ‘கூலி’ கேட்ட ரஜினிகாந்த்?.. சம்பளம் இத்தனை கோடியா?

சென்னை: சில இயக்குநர்கள் சொன்ன பட்ஜெட்டை விட 5 மடங்கு அதிக பட்ஜெட்டை இழுத்துவிட்டு படத்தையும் ஒழுங்கா முடிக்காமல் உள்ளனர். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சன் பிக்சர்ஸ் கொடுத்த பட்ஜெட்டில் மீதம் 5 கோடி ரூபாய் இருக்கு இந்தாங்க பிடிங்க என அருணாச்சலம் பட கிளைமேக்ஸ் மாதிரி பணத்தை மிச்சப்படுத்திக் கொடுத்த சம்பவத்தை நாகார்ஜுனாவே மேடையில் சொல்லி சிலாகித்தார்.

5 மடங்கு அதிகமாக பட்ஜெட்டை இழுத்துவிட்டு படத்தையும் சரியாக முடிக்காத இயக்குநர் ஷங்கர் தான் என டோலிவுட் முதல் கோலிவுட் வரை அவரை போட்டு மீண்டும் நெட்டிசன்கள் பொளக்க ஆரம்பித்துள்ளனர். தெலுங்கில் ராஜமெளலி எப்படியோ, தமிழில் லோகேஷ் கனகராஜ் அப்படி என ரஜினிகாந்தும் தன் பங்குக்கு பேசி லோகேஷ் கனகராஜின் சம்பளத்தை 50 கோடியில் இருந்து 100 கோடிக்கு உயர்த்திவிடுவார் போல தெரிகிறது.

Superstar Rajinikanth salary in Cooli movie latest updates out now
Photo Credit:

கூலி படத்துக்கு லோகேஷ் கனகராஜ் 50 கோடி சம்பளம் வாங்கியதை அவரே ஒத்துக்கொண்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.

25 கோடி போதும்: சன் பிக்சர்ஸிடம் கறாராக தனது சம்பளத்தை எல்லாம் கேட்காமல் ஆரம்பத்தில் கொடுத்த 25 கோடி ரூபாய் அட்வான்ஸ் போதும் என வாங்கி வைத்துக் கொண்டு கூலி மொத்த படத்தையும் டப்பிங் உள்பட அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஜினிகாந்த். தற்போது அனைத்து கால்குலேஷனையும் போட்ட பிறகு சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சம்பளத்தை சன் பிக்சர்ஸ் நிர்ணயிக்க, அவரது தரப்பில் இருந்து கூடுதல் கூலி வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் உலாவி வருகின்றன.

கூடுதல் கூலி வேண்டும்: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கூலி படத்தில் நடித்ததற்காக அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ரஜினிகாந்த் தரப்பு ரவுண்டா 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்து விடுங்க என்கிற கோரிக்கை வைத்திருப்பதாக கூறுகின்றனர். இதுவரை கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 500 கோடி ரூபாய் தாண்டியுள்ள நிலையில், ரஜினிகாந்த் தரப்பு கேட்பது நியாயமான ஒன்றுதான் என்றும் கூறுகின்றனர்.

அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்துக்கு அவருக்கு சம்பளமாக 300 கோடி வரை சன் பிக்சர்ஸ் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அனைத்தையும் கூட்டி கழித்துப் பார்த்த அண்ணாமலை கணக்கு சரியா வரும் என 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறுகின்றனர். கண்டிப்பாக படம் ரிலீஸாகி பெரிய லாபத்தை ஈட்டினால் கலாநிதி மாறன் தாராளமாக அந்த சம்பளத்தை வழங்கிவிடுவார் என்றே கூறுகின்றனர்.

மற்றவர்களுக்கும் அதிகம்: சூப்பர் ஸ்டார் சம்பளம் 200 கோடி ரூபாய் என்றால், லோகேஷ் கனகராஜ் சம்பளம் 50 கோடி ரூபாய் என்றால் நாகார்ஜுனா, செளபின் சாஹீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, அனிருத் என மற்ற பிரபலங்களுக்கான சம்பளமும் எக்கச்சக்கமாக போகும் என்றும் கூலி படத்தின் பட்ஜெட்டே 400 கோடி ரூபாயை தொடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X