தலைவர் 169 படத்திற்கு முன் அமெரிக்கா பறக்கும் சூப்பர்ஸ்டார்... எதுக்கு தெரியுமா?

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிப்படமானது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். அவரை வைத்து இளம் நடிகர்கள் சிறப்பான படங்களை கொடுத்து வருகின்றனர். கமர்ஷியல் அவதாரங்களை விட்டுவிட்டு தற்போது சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் ரஜினி தொடர்ந்து நடித்து வருகிறார்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

ஆனால் சமீபத்தில் வெளியான அவரது படம் கமர்ஷியல் அம்சங்களை அதிகமாக கொண்டு வெளியானது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த அண்ணாத்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் சிறப்பான வசூலை குவித்தது.

திரையரங்க ரிலீஸ்

திரையரங்க ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை ஒருங்கிணைத்து படத்தை இயக்கியிருந்தார் சிவா. நீண்ட நாட்களுக்கு பிறகு கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். திரையரங்குகளிலும் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அதிகமான அளவில் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்தனர்.

ரஜினியின் அடுத்தப்படம்

ரஜினியின் அடுத்தப்படம்

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸில் பிசியாக இருக்கும் நெல்சன், அதையடுத்து தலைவரை இயக்கவுள்ளார்.

ரஜினி அமெரிக்கா பயணம்

ரஜினி அமெரிக்கா பயணம்

இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தின் துவக்கத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் துவங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் முன்னதாக ரஜினி, அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமான ஹெல்த் செக்கப்

வழக்கமான ஹெல்த் செக்கப்

ரஜினியின் வழக்கமான ஹெல்த் செக்கப்பிற்காக அவர் அமெக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில தினங்கள் தங்கி, தன்னுடைய வழக்கமான செக்கப்பை முடிக்கும் ரஜினி, தொடர்ந்து சென்னை திரும்பியதும் தலைவர் 169 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X