Vettaiyan: வேட்டையனில் தலைவர் பயன்படுத்திய மொபைல் விலை என்ன மாடல் தெரியுமா? வலைவீசி தேடும் ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய போன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோவுக்கான கண்டெண்ட்டாக இந்த படத்தின் கதையை இயக்குநர் ஞானவேல் மற்றும் கிருத்திகா ஆகியோர் அமைத்த விதம் பாரட்டுக்குரியது. மேலும் பொருளாதாரா குற்றப்பிரிவு அதிகாரியாக ரஜினி மாற்றப்பட்டபின்னரும்கூட, வில்லனுக்கு எந்த வகையில் தண்டனை பெற்றுத் தரலாம் என கதையை நகர்த்திய விதம் அருமை.

rajinikanth vettaiyan vettaiyan mobile

மேலும் பட்ஸ் சட்டம் (Buds Act) குறித்து அமிதாப் பச்சன் எடுக்கும் பாடம் ஒரு விழிப்புணர்வு செஷன். படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை அனிருத் தனக்கான வேலையை கச்சிதமாகச் செய்யவில்லை என்றாலும் குற்றம் சொல்லும் அளவிற்கு சொதப்பவில்லை. அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் பாராட்டுகளைப் பெறுகின்றது. மேலும் படத்தில் ரஜினிக்கு பல இடங்களில் மாஸ் காட்சிகள், மாஸ் ஓப்பனிங் காட்சிகள் இருக்கின்றது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் சூப்பர் ஸ்டார் ஹெலிஹாப்ட்டரில் எண்ட்ரி கொடுக்கும் காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்ந்தது.

பாராட்டு: படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. படம் முழுக்க துறுதுறுவான கதாபாத்திரமாக வரும் ஃபகத் ஃபாசில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் கதையோட்டத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதற்கான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அமிதாப் பச்சன் போன்ற கைதேர்ந்த நடிகரின் கண் பார்வையில் இருந்து விரல் அசைவு வரை அனைத்தும் பெர்ஃபெக்ட். ரித்திகா சிங் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகின்றார்.

rajinikanth vettaiyan vettaiyan mobile

மொபைல்: படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபிளிப் செய்யும் மொபைல் போனை வைத்திருப்பார். இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் அதிகம் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதற்கு காரணமாக அதன் விலையாகக் கூட இருக்கலாம். ஆனால் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலாக அதனைப் பயன்படுத்தியிருப்பார். இதனால் இந்த மொபைல் போன் குறித்து ரசிகர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.

சூப்பர் ஸ்டார்: வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் பயன்படுத்தியது, சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள ’ SAMSUNG GALAXY Z FLIP 6 ' என்ற மொபைல் போன் ஆகும். இதன் விலை குறைந்த பட்சம் ஒரு லட்சம். இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ள மொபைல் ஆகும். அதேபோல் இந்த மொபைலின் அதிக பட்ச விலை ரூபாய் ஒரு லட்சத்து 21ஆயிரம் ஆகும். ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மொபைல் 12 ஜி.பி ரேம் மற்றும் 512 ஜி.பி இண்டர்னல் ஸ்டோரேஜ் திறன் கொண்டதாக உள்ளது. இதே மொபைல் 8 ஜி.பி ரேமில் உள்ளது. அதன் விலை ரூபாய் 65 ஆயிரம் என சாம்சங் நிறுவனம் விலை நிர்ணயித்துள்ளது. இந்தவகைப் போனில் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளது. மேலும் இதன் கேமரா அதிக பட்சம் 50 எம்.பி திறன் கொண்டது. முன் பக்கம் உள்ள கேமரா 10 எம்.பி திறன் கொண்டது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த மொபைலை இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X