அப்பா நம்ம புது வீடு எப்படி இருக்கு.. மகளின் பிரம்மாண்ட பங்களாவை பார்த்து வியந்த ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அண்மையில் எளிமையாக நடைபெற்ற நிலையில், ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டை சுற்றிப்பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது.

Superstar Rajinikanth visits daughter Aishwarya s new home

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். அந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

லால் சலாம்: இதைத் தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், ரஜினி மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனால் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை வச்சு செய்தார்கள்.

பிரம்மாண்டமான வீடு: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சொந்தமாக புது வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டை ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து கட்டி உள்ளார். அதில், இன்டீரியர் டிசைன்கள், பளிங்கால் ஆன கலை பொருட்கள், மனதை மயக்கும் ஓவியங்கள் என வீட்டை செதுக்கி உள்ளார். இந்த வீட்டின் வேலைகள் முடிந்த நிலையில், தனது தந்தைக்கு இந்த வீட்டை சுற்றி காட்டி உள்ளார். மகள் பார்த்து பார்த்து ஆசை ஆசையாக கட்டிய வீட்டை ரஜினிகாந்த் வியந்து பார்த்து மகளை பாராட்டினார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அண்மையில் மிகவும் எளிமையாக நடந்ததாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X