அஜித்தின் நெத்தியடி response...ப்ளு சட்டை மாறனுக்கு தானா இது?
சென்னை : அஜித்தையும், அவருக்கு ஆதரவாக பேசுபவர்களையும் தொடர்ந்து மோசமாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித்தின் பழைய கருத்தை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
Recommended Video
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே பல படங்களில் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து விட்டது வலிமை. உலகம் முழுவதும் வலிமை படத்தின் வசூல் இதுவரை ரூ.200 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் வலிமை படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வலிமை படம் நஷ்டமா
இந்நிலையில் வலிமை படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், அஜித்தை உருவ கேலி செய்து மிக மோசமாக விமர்சித்திருந்தார். அஜித் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் அஜித்தையும், அவரது ரசிகர்களையும் மிக கடுமையாக தாக்கி விமர்சித்து வந்தார். வலிமை படத்தால் பல மாவட்டங்களில் விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம் என்றும் கூறி இருந்தார்.

விடாமல் விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன்
இதற்கிடையில் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் ஆரி, ஆர்.கே.சுரேஷ் போன்றோர் அஜித்தை உருவ கேலி செய்ததற்காக மேடையிலேயே ப்ளூ சட்டை மாறனை மிக கடுமையாக விமர்சித்தனர். அவர்களையும் கிண்டல் செய்தும், அவர்களை விமர்சிப்பவர்களின் ட்வீட்களை ரீட்வீட் செய்தும் விடாமல் ட்வீட் பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதாக, அஜித்தின் முந்தைய பதிவை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார் சுரேஷ் சந்திரா.

நினைவுபடுத்திய சுரேஷ் சந்திரா
கடந்த ஆண்டு அஜித் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அஜித் சார்பில் அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்வீட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பு, வெறுப்பாளர்களின் வெறுப்பு, எந்த சார்பு இல்லாமல் பார்க்கும் நடுநிலையாளர்கள் ஆகியவற்றை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. எப்போதும் அளவில்லாத அன்புடன் அஜித்குமார் என பதிவிட்டிருந்தார். தேவைப்படுபவர்களுக்காக இதை மீண்டும் நினைவுபடுத்துவதாக கூறி அதை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

இன்னும் நீங்க விடலயா
ஆனால் இதையும் கிண்டல் செய்யும் விதமாக ரசிகர்களுக்கு அஜித்தின் அட்வைஸ் என்ற தலைப்பில் வெளியான பத்திரிக்கை செய்தி ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், ஒருநாள் நீங்க எழும்பும்போது உங்களுக்கு 35,40 வயது ஆகியிருக்கலாம். அதுவரை நீங்க எதுவுமே சாதிக்காமல் போயிருக்கலாம். அப்போ வருத்தப்படாதீங்க. இந்த நேரத்தை பாசிட்டிவா யூஸ் பண்ணுங்க. அதுக்காக ரசிகர்களா இருக்காதீங்கனு சொல்ல வரல. தயவு செய்து நேரத்தை வீணாக்காதீங்க. நேரத்தை நீங்க வேஸ்ட் பண்ணிட்டா திரும்ப வாங்கி முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











