பவுலராக மாற பயிற்சி எடுத்த பரோட்டா சூரி

By Veera Kumar

சென்னை: ஜீவா என்ற திரைப்படத்துக்காக பரோட்டா சூரி பவுலிங் பயிற்சி எடுத்துள்ளார் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடிக்கும் படம், ஜீவா. சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் வெளியிடுகிறார்.

Suri undergone bowling training

வரும் 26ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றி சுசீந்திரன் பத்திரிகைக்கு கூறியதாவது: சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று இருக்கிற ஒருவன், அதில் நடக்கிற அரசியல் மற்றும் போட்டி, பொறாமையைத் தாண்டி முன்னேறுகிறானா, இல்லையா என்பதுதான் கதை.

கிரிக்கெட் மட்டுமல்ல, இதில் எந்த விளையாட்டையும் சேர்த்துப் பார்க்கலாம். மற்ற எல்லா துறையையும் விட, விளையாட்டுத் துறையில் அதிக அரசியல் இருக்கிறது. அதை இந்தப் படம் சொல்லும்.

படத்தில் ஒரு வசனம் வரும். அதாவது, வெளிநாட்டில் மட்டும்தான் விளையாடி தோத்துப் போறாங்க. நம்ம நாட்டுல, வாய்ப்பு கிடைக்காமலேயே தோத்துப் போறாங்க என்று. இதுதான் ஜீவா படம் சொல்லும் விஷயம்.

சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் போராடி தோற்றுப் போனவர்களின் வாழ்க்கையை படம் பிரதிபலிக்கும். சூரி பவுலராக வருகிறார். இதற்காக பயிற்சியாளர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் பவுலிங் பயிற்சி பெற்றார். இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். லட்சுமி மேனன் ஜோடி. மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X