Suriya 38: 'ஏர் டெக்கன்' கோபிநாத்தாக நடிக்கும் சூர்யா
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தொழில் அதிபர் கோபிநாத்தாக நடிக்க உள்ளாராம்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதையடுத்து அவர் இறுதிச் சுற்று படம் புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா 38 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கோபிநாத்
ஏர் டெக்கன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தான் சூர்யாவை வைத்து படமாக எடுக்கிறாராம் சுதா கொங்கரா. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபிநாத் அரசியல்வாதியும் கூட. குறைந்த விலையில் விமான பயணத்தை அறிமுகப்படுத்தியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் அதிபர்
கஜினி படத்திற்கு பிறகு இதில் சூர்யாவை ஸ்டைலான தொழில் அதிபராக பார்க்கலாம் என்று ரசிகர்கள் தற்போதே குஷியாகிவிட்டனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஆஸ்கர்
சூர்யா 38 படத்தை 2டி என்டர்டெயின்மென்டுடன் சேர்ந்து குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. ஆஸ்கர் விருது வாங்கிய பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் படத்தை தயாரித்தவர் குனீத் மோங்கா.

இயக்குநர்
சூர்யா 38 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லொகேஷன் பார்க்கும் வேலையில் பிசியாக உள்ளாராம் சுதா. இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











