சூர்யா 45 அப்டேட் என்ன தெரியுமா?.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ஆர்.ஜே.பாலாஜி செம ஸ்பீடு ப்பா
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது. சிவா இயக்கத்தில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் ரசிகர்கள் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் கடைசியாக சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் அவருடன் திஷா பதானி, கே.எஸ்.ரவிக்குமார், நட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை தயாரித்திருந்தார். மிகப்பெரிய ஹைப்பினை இந்தப் படத்துக்கு படக்குழுவினர் ஏற்றிவிட்டனர்.

என்ன ஹைப்புகள்?: அதாவது இந்தப் படம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்று முதலில் வாயை திறந்தார் ஞானவேல் ராஜா. அடுத்ததாக சூர்யா ஒரு ப்ரோமோஷனில் பேசும்போது, இந்தப் படத்தை பார்க்கும்போது எல்லோரும் வாயை பிளந்துதான் பார்ப்பார்கள் என்றும் கூறினார். இதன் காரணமாக படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒருவித பயமும், ஒருவித ஆர்வமும் ஏற்பட்டன. அந்த அச்சம் கலந்த ஆர்வத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள் அவர்கள்.
படம் படுதோல்வி: ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை. க்ரிஞ்ச் தனமான டயலாக்குகள், சுமாரான மேக்கிங், ஒட்டாத இசை என அத்தனை ஏரியாக்களிலும் படம் சுமாராக இருந்ததால் படத்தை படுதோல்வியடைய செய்தார்கள். அதேபோல் 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று ஞானவேல் ராஜாவால் கூறப்பட்ட கங்குவா 200 கோடி ரூபாயைகூட வசூலிக்கவில்லை. இந்தப் படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு 140 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் சமீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரெட்ரோ: சூழல் இப்படி இருக்க கங்குவா கொடுத்த அடியை அடுத்தடுத்த படங்களில் ஈடுகட்ட சூர்யா முடிவு செய்திருக்கிறார். அந்தவகையில் அவர் இப்போது அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரெட்ரோ. இந்தப் படத்தின் டீசர் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் தங்களது ஏகோபித்த வரவேற்பை கொடுத்தது; கண்டிப்பாக இது எங்கள் சூர்யாவுக்கு க்ளாஸ் ப்ளஸ் மாஸ் படமாக இருக்கும் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
சூர்யா 45: இந்தப் படத்தை முடித்திருக்கும் அவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக நடந்த சூழலில்; தற்போது அந்த ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும்; அடுத்து சென்னையில் ஒரு நீதிமன்றம் செட் போட்டு ஷூட்டிங் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட ஆர்.ஜே.பாலாஜி இவ்வளவு ஸ்பீடாக ஷூட்டிங்கை நடத்துகிறாரே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications