மீண்டும் சிங்கமாக மாறிய சூர்யா.. போலீஸ் கெட்டப்பில் கொலமாஸ் காட்டுறாரே மனுஷன்.. லீக்கான லுக்!
சென்னை: மலையாளத்தில் ரோமஞ்சம், ஆவேஷம் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் அடுத்ததாக சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் சீரிஸ் படங்களுக்குப் பிறகு மீண்டும் காக்கி சட்டை அணிந்துக் கொண்டு சிங்கமாக களத்தில் இறங்கியுள்ளார்.
கொச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சில காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. மாஸ்க் அணிந்து மீசையில்லாத ஸ்டைலிஷ் காப்பாக சூர்யா நடந்து வருவதை பார்த்த ரசிகர்கள் அடிபொலி என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த ஆண்டு சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால், பிளாக்பஸ்டர் படத்தை சூர்யா கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கண்டிப்பாக சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அதை நோக்கியே அமையும் என்பது உறுதியாக தெரிகிறது.
கைவசம் 3 படங்கள்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி இன்னமும் லாக் செய்யப்படவில்லை. கருப்பு படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ள சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக கூறுகின்றனர். அடுத்ததாக மலையாள இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
நஸ்ரியா ஹீரோயின்: தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டார். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள நஸ்ரியா தற்போது ஆவேஷம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
#Suriya47 :- The Singam Is Back — Suriya Returns in Police Avatar!
— Bhala Media (@Bhalamedia) December 20, 2025
Suriya in a police uniform hits different — raw, intense, and absolutely electrifying!
The #Suriya47 promo shoot begins today, and the first look promises a full-throttle mass feast.
Directed by Jithu… pic.twitter.com/n2HY7lwQbe
மீண்டும் சிங்கமாக மாறிய சூர்யா: கெளதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் ஸ்டைலிஷ் காப்பாக நடித்து கலக்கிய சூர்யா ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 1,2 மற்றும் 3 படங்களிலும் போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டினார். இந்நிலையில், மீண்டும் காக்கி சட்டை போட்டுக் கொண்டு ஜித்து மாதவன் படத்தில் நடித்து வருகிறார். கொச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதன் காட்சிகள் கசிந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் சில வீடியோக்களும், புகைப்படங்களும் பரவி வருகின்றன. மேலும், கூடவே ஏஐ எடிட் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. வரும் கிறிஸ்துமஸ்க்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











