பாத்து பட்டாசு வெடிங்க: விழிப்புணர்வு படம் மூலம் அட்வைஸ் செய்ய வரும் சூர்யா

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பட்டாசு விபத்துகளை தடுக்க தீயணைப்பு துறையினர் கடந்த ஒரு வார காலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருவதுடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலம் சென்னை தி. நகரில் நடக்கவிருக்கிறது.
இதற்கிடையே நடிகர் சூர்யாவை வைத்து விழிப்புணர்வை படத்தை தீயணைப்பு துறையினர் தயாரித்துள்ளார்கள். 2 நிமிடம் ஓடும் இந்த படத்தில் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறாராம். படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வேலை நடந்து வருகிறதாம். அந்த வேலை முடிந்ததும் படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டிவிட்டு திரையரங்குகளில் வெளியிடவும், டிவி சேனல்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா தெரிவித்தார்.
இந்த படத்தில் சூர்யா தானாக முன்வந்து நடித்ததுடன் அதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











