Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு!

திருவனந்தபுரம் : மலையாள திரையுலகம் சார்பில் 'அம்மா மழவில்லு' நட்சத்திர கலைவிழா மே 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த நட்சத்திர கலைவிழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற மூத்த நடிகர்கள் முதல் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் என இளம் நடிகர்கள் வரை பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், நமீதா ப்ரமோத் ஆகியோர் இந்த விழாவில் நடனமாடி கலக்கியிருக்கின்றனர். AMMA (Association of Malayalam Movie Artists) நடத்திய இந்த கலைவிழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டுள்ளார். கேரளாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் சூர்யா ஏற்கெனவே கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தனது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

நடிகர் விஜய்க்கு பிறகு அதிகமான இளம் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் சூர்யா. ஆகவே, மலையாள ரசிகர்களைக் கவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சூர்யா. நட்சத்திரக் கலைவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் சூர்யா.

மம்மூக்காவின் திருமண நாள் இன்று என மேடையில் அறிவித்து பார்வையாளர்களின் ஆரவாரத்தை பரிசாகப் பெற்றார். மேலும், மலையாள நடிகர் சங்கத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து மலையாள ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்.

சூர்யாவிற்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சூர்யாவை வரவேற்கும்போதும் சூர்யாவின் பேச்சின்போதும், ஆரவாரம் செய்துள்ளனர் பார்வையாளர்கள். மலையாள திரையுலகில் நல்ல ஆதரவைச் சம்பாதித்திருக்கிறார் சூர்யா.