ரசிகரின் திருமணம்.. ஜோடியாக சென்ற சூர்யா - ஜோதிகா.. எவ்வளவு மதிக்கிறாங்க பாருங்க
சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக திகழ்கிறார்கள். இரண்டு பேரும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு; நடிக்கவும் செய்கிறார்கள். சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக கருப்பு, விஸ்வநாத்&சன்ஸ் உள்ளிட்ட படங்கள் வருகின்றன. ஜோதிகா ஹிந்தியில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் இரண்டு பேரும் ஜோடியாக தங்கள் ரசிகரின் திருமணத்துக்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
சூர்யாவும், ஜோதிகாவும் முதல்முறையாக சேர்ந்து நடித்தபோதே அவர்கள் காதலிக்க தொடங்கிவிட்டார்கள். அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவக்குமார்; சில வருடங்களில் மனம் மாறி ஒத்துக்கொண்டார். அதனையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த கையோடு ஒரு மகளும், மகனும் பிறந்தார்கள். எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கி தாயாக தன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிள்ளைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ஜோதிகா.

பாலிவுட்டில்தான் கவனம்: தனது இரண்டாவது இன்னிங்ஸை தமிழில் நல்லபடியாகத்தான் தொடங்கினார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது முழு கவனத்தையும் பாலிவுட் பக்கம் திருப்பிவிட்டார். அதுமட்டுமின்றி சூர்யாவையும் பாலிவுட்டில் கவனம் கொள்ள செய்தார். இதன் காரணமாக இரண்டு பேரும் தங்கள் பிள்ளைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் சிவக்குமாருடன் சண்டை போட்டுவிட்டுத்தான் அங்கே சென்று தங்கியிருக்கிறார்கள் என வதந்திகள் பரவின.
திட்டவட்ட மறுப்பு: அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். முதலில் ஒரு பேட்டியில் பேசிய சூர்யா, 'ஜோதிகா எனக்காக இத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தார். அவருக்காக நான் இப்போது மும்பையில் இருக்கிறேன் அவ்வளவுதான்' என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இன்னொரு பேட்டியில் பேசிய ஜோதிகா, 'எனக்கும் சிவக்குமாருக்கும் சண்டை என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. சொல்லப்போனால் நான் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்தபோது அவர்தான் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார்' என்று கூறினார்.
அடுத்த படங்கள்: இரண்டு பேருமே இப்போது தங்கள் கரியரில் பிஸியாக இருக்கிறார்கள். சூர்யாவை பொறுத்தவரை அவர் நடிப்பில் கருப்பு, விஸ்வநாத்&சன்ஸ் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகியிருக்கின்றன. ஜோதிகாவோ, பாலிவுட்டில் சிஸ்டம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. அவர் ஹிந்தியில் செம பிஸியாக இருந்தாலும் தமிழிலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. அவரும், தன்னையும் சூர்யாவையும் வைத்து ஒரு லவ் ஸ்டோரி எடுத்தால் நடிக்க தயார் என்று அறிவித்திருக்கிறார்.
திருமணத்தில் ஜோடி: இந்நிலையில் சூர்யாவும், ஜோதிகாவும் தங்கள் ரசிகரின் திருமணத்துக்கு ஜோடியாக சென்று வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களின் வருகையால் மணமக்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். இதை பார்த்த நெட்டிசன்களோ ஒரு ரசிகரை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு சூர்யாவும், ஜோதிகாவும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். அவ்வளவு சிம்ப்பிளாக சென்றுவிட்டு வந்திருக்கிறார்களே என்று கமெண்ட்ஸ் செய்து அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















