இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுதா? வைரலாகும் பிரபல நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படம்!

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் மற்றும் ராதை வேடங்களை போட்டு அழகு பார்த்து இருப்பீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் தனது இரு குழந்தைகளுக்கும் கடவுள் வேஷம் போட்டு அழகுப் பார்த்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

போட்டோவை பார்த்த உடனே நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தான் அந்த புகைப்படத்தில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. பலரும் தங்கள் குழந்தைகளை அழகிய கிருஷ்ணனாக வேடமிட்டு போட்டோக்களை ஸ்டேட்டஸ்களில் வைத்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி இருப்பீர்கள். பெண் குழந்தைகள் ராதை கெட்டப்பில் அழகாக இருக்கும் புகைப்படங்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

கடவுள் கெட்டப்பில்

கடவுள் கெட்டப்பில்

இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே கடவுள் கெட்டப்பில் சிறு வயதில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் பல சூர்யா ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இருவரும் அப்பவே எவ்வளவு அழகாக உள்ளனர் என பலரும் பார்த்து ரசித்து கண் வைத்து வருகின்றனர்.

அப்பா சிவகுமார்

அப்பா சிவகுமார்

பழம்பெரும் நடிகர் சிவகுமார் முருகராகவும், கிருஷ்ணராகவும் பல படங்களில் கடவுள் வேடங்களை போட்டு நடித்து அசத்தி இருக்கிறார். அவரது மகன்களுக்கும் அப்பவே இது போன்ற வேடங்களை போட்டுப் பார்த்து அழகுப் பார்த்த அரிய புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

போதி தர்மர்

போதி தர்மர்

சினிமாவில் மன்னர் கெட்டப்பில் நடிகர் சூர்யா 7ம் அறிவு படத்தில் போதி தர்மராக நடித்து கலக்கி இருப்பார். முழுக்க முழுக்க பாகுபலி போன்ற ஸ்டைலில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கனவாகவே உள்ளது. சிங்கமாக போலீஸ் படங்களில் நடித்து கலக்கிய சூர்யா வரலாற்று படத்தில் கூடிய விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி ஏற்கனவே காஷ்மோரா திரைப்படத்தில் அப்படியொரு கெட்டப்பில் நடித்து மிரட்டி விட்டார். அதையும் தாண்டி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக நடித்து வருகிறார்.

இருவரும் பிசி

இருவரும் பிசி

அப்பா 8 அடி பாய்ந்தால் இரண்டு மகன்களும் ஆளாளுக்கு ஒரு 80 அடி பாய்ந்து வருகின்றனர். சர்தார், பொன்னியின் செல்வன் என கார்த்தி ஒரு பக்கம் இரண்டு படங்களில் பிசியாக உள்ள நிலையில், மறு பக்கம் சூர்யா ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் என வேற லெவலில் பிசியாக உள்ளார்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பதை போலவே அண்ணன் தம்பி இருவரும் இணைந்து விரைவில் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்தால் நிச்சயம் அது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுக்கும் என்பது கன்ஃபார்ம். கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிகர் சூர்யா நடித்திருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X