ரிலீஸ் தேதியில்லாமல் வெளியான கருப்பு போஸ்டர்.. அப்செட்டான அன்பான ஃபேன்ஸ்.. வா வாத்தியார்?
சென்னை: நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் போஸ்டரும் கார்த்தியின் வா வாத்தியார் பட புத்தாண்டு வாழ்த்து போஸ்டரும் இன்று கடமைக்காக வெளியாகி உள்ளன. ஆனால், அந்த 2 போஸ்டர்களையும் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கூட ஹேப்பியாகவே இல்லை.
மாறாக சூர்யா ரசிகர்களும் கார்த்தி ரசிகர்களும் இந்த ஆண்டாவது படத்தை ரிலீஸ் பண்ணிடுவீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்ட கருப்பு படத்தின் போஸ்டருக்கு கீழ் அன்பான ஃபேன்ஸ் எல்லாம் ஆக்ரோஷ ஃபேன்ஸ்களாக மாறி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
சூர்யாவே கண்டுக்கல: ட்ரீம் வாரியர் வெளியிட்ட கருப்பு படத்தின் புத்தாண்டு போஸ்டரை நடிகர் சூர்யா கூட வெளியிடவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் கூட போடவில்லை என்றும் சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 2025ம் ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்த்த கருப்பு படம் பொங்கலுக்கு கூட வெளியாகவில்லை. மேலும், திட்டமிட்ட ஒரு ரிலீஸ் தேதி அல்லது மாதத்தை கூட சொல்லாதது தான் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
பராசக்தியை மிஸ் பண்ணிட்டாரு: சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து தேசிய விருதை பெற்ற சூர்யா பராசக்தி படத்தில் நடித்திருந்தால் இந்நேரம் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களும் சப்போர்ட்டாக நின்று ஜன நாயகன் படத்துக்கு செம போட்டியாக அமைந்திருக்கும். ஆனால், அதையெல்லாம் சூர்யா மிஸ் பண்ணிவிட்டார் என்றும் வெங்கி அட்லூரி படம் இந்த ஆண்டு சம்பவம் பண்ணும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வா வாத்தியார் நிலைமை: அண்ணன் சூர்யாவை போலவே தம்பி கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் புத்தாண்டு போஸ்டரும் வெளியானது. ஆனால், டிசம்பர் மாதம் வெளியாகும் என ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை எல்லாம் வைத்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கடைசியாக படத்தை வெளியிடாத நிலையில், பொங்கலுக்கும் அந்த படம் வெளியாகாது என்பது உறுதியாகி உள்ளது. கார்த்தியின் சர்தார் 2 படமும் என்ன ஆனது என்றும் அதன் அப்டேட் கூட வராமல் அமைதியாக உள்ளதே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











