கருப்பு சட்டையில் வந்த சூர்யாவே விஜய்யை வாழ்த்திட்டாரு.. மகேஷ் பாபு மாஸ்..
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் குமார், கவின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், டோலிவுட் டாப் ஹீரோக்களான மகேஷ் பாபு, நானி, ரவி தேஜா, விஜய் தேவரகொண்டா என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சிஎம் விஜய் என கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட்டில் இருந்து முதல் வாழ்த்தாக டைகர் ஷெராஃப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகைகள் காஜல் அகர்வால், சித்தி இத்னானி, தொகுப்பாளினி விஜே ரம்யா என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் இன்னமும் அமைதி காப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வரலாறு படைத்த விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷாவாகவும் வலம் வந்த விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களிலும் முதல் இடத்தை பிடித்தார். இதற்கு மேல் சினிமாவுக்கு பதில் தன்னை இந்த அளவுக்கு நேசித்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்து திமுகவை எதிர்த்து அரசியலில் களமிறங்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளார் தளபதி விஜய்.

மகேஷ் பாபு வாழ்த்து: ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட மகேஷ் பாபுவின் படங்களை கில்லி, போக்கிரி என ரீமேக் செய்து நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் தான் விஜய். க்ரீன் சேலஞ்சை விஜய்க்கு மகேஷ் பாபு வழங்க அவரும் வீட்டில் செடியை வைத்து போட்டோ வெளியிட்டார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்கிற நிலையில், விஜய்யின் வெற்றியை வாழ்த்தி தற்போது மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா வாழ்த்து: சியான் விக்ரம் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்த நிலையில், கருப்பு சட்டை போட்டு வந்த கருப்பு ஹீரோ சூர்யா விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்." என பதிவிட்டுள்ளார். கண்டிப்பாக ஜன நாயகன் vs கருப்பு கிளாஷ் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
ரஜினிகாந்த் அமைதி: சிரஞ்சீவி, மீனா, மகேஷ் பாபு, சூர்யா என பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் இதுவரை அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன சமயத்தில் கூட ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை என பலரும் புலம்பிய நிலையில், விஜய்க்காக ரஜினிகாந்த் சப்போர்ட் செய்தார். தேர்தல் முடிவுகள் மொத்தமாக வந்ததும் கண்டிப்பாக விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிப்பார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications