விஜய்க்கு மகள்.. சூர்யாவுக்கு ஜோடி.. என் மூச்சவ பேச்சவ தெறிக்குதே.. கஜினி கிளைமேக்ஸ் பொண்ணு மீம்ஸ்!
சென்னை: சூர்யாவுடன் ஜோடி போட்டு மமிதா பைஜு 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடித்த நிலையில், அதன் டீசர் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட மீம்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. பிரேமலு படத்தில் இருந்தே மமிதா பைஜுவுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் கூடி விட்டனர்.
டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து அவர் நடித்த நடிப்பை பார்த்து கோலிவுட் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். தமிழ் சினிமா இயக்குநர்களும் மலையாள நடிகையான மமிதா பைஜுவை அரை டஜன் படங்களில் கமிட் செய்துள்ளனர்.

விஜய்யின் ஜன நாயகன் படத்தில் அவருக்கு வளர்ப்பு மகளாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக அதுவும் 20 வயது கேப் கொண்ட லவ் ஸ்டோரியில் நடித்திருக்கும் நிலையில் தான் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன.
எனக்கு 40.. உனக்கு 20: த்ரிஷா நடித்த எனக்கு 20 உனக்கு 18 படத்தை போல எனக்கு 40 உனக்கு 20 என படத்திற்கு டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தேவையில்லாத டைட்டில் என கலாய்த்து வருகின்றனர். சூர்யாவின் வயதான தோற்றம் ரொம்பவே செயற்கைத்தனமாக சில இடங்களில் தெரிவதாகவும் அவரை இன்னமும் யங்காகவே காட்டலாம் என்றும் சூர்யா இந்த வயதிலும் நிஜத்தில் செம யங்காகவே உள்ளார் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என் மூச்சவ.. பேச்சவ: மமிதா பைஜுவை இனிமேல் எந்த படத்தில் பார்த்தாலும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் சாய் அபயங்கர் இசையில் அவர் நடித்த டியூட் படத்தில் இடம்பெற்ற "என் மூச்சவ.. பேச்சவ" பாடல் வழியாகவே ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக பலரும் கார் சீனில் மமிதா பைஜு சொடக்கு போடும் காட்சியை அந்த பாடலை வைத்து எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
கஜினி கிளைமேக்ஸ் சின்னப் பொண்ணு: ஃபர்ஸ்ட் போஸ்டரை வைத்தே சூர்யாவுடன் இருக்கும் குழந்தை அவருடைய தம்பி என கிளப்பி விட்டனர். இந்நிலையில், தற்போது கஜினி படத்தின் கிளைமேக்ஸில் சஞ்சய் ராமசாமிக்கு டாட்டா சொல்லும் சிறுமி தான் தற்போது சஞ்சய் விஸ்வநாத்துக்கு ஜோடியாகி உள்ளார் என ஃபேன் தியாரிக்களை ஆரம்பித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். துப்பாக்கி சுடும் வீரராக சூர்யா நடித்துள்ள நிலையில், அஜித்தின் கதையையும் சுட்டு விட்டாரா சூர்யா என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
விஜய்க்கு மகள்.. சூர்யாவுக்கு ஜோடி: ஜன நாயகன் படத்தில் விஜய்யின் வளர்ப்பு மகளாகவே மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருப்பது மட்டும் படத்தின் கதையே ஏஜ் கேப் லவ் என்பதால் படம் வெளியான பின்னர் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவியும் என இப்போதே ட்ரோல் செய்து வருகின்றனர். கண்டிப்பாக லக்கி பாஸ்கர் இயக்கிய வெங்கி அட்லூரி சூர்யாவுக்கு ஒரு சூப்பர் வெற்றிப் படத்தை கொடுப்பார் என அவரது ரசிகர்கள் மலைபோல நம்பி காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











