சூர்யா படத்துக்கு இப்படியொரு டைட்டிலை வைத்திருக்கிறாரா ஆர்ஜே பாலாஜி?.. லீக்கான ‘கருப்பு’ ரகசியம்!
சென்னை: பல ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ரெட்ரோ படத்தின் மூலமாக பாக்ஸ் ஆபீஸில் லாபத்தை பார்த்த நிம்மதியில் நேற்று லீலா பேலஸில் வெற்றி விழாவை கொண்டாடி விட்டார் சூர்யா. கங்குவா படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் என வாய்விட்டு மாட்டிக் கொண்ட ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்கின்றனர்.
சிறுத்தை சிவா கூட சமீபத்தில் சூரி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மாமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து சூரியை மனதார வாழ்த்தினார். ரெட்ரோ படத்தின் வெற்றி விழா சிறப்பாக முடிவடைந்த நிலையில், தற்போது சூர்யா 45 படமான ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.

சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது 42வது பிறந்தநாளை சூர்யா 45 படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். மெளனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய், அஜித், சூர்யா: ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் என நயன்தாரா ஒரு ரவுண்ட் வந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு ஃபிளாஷ்பேக்கில் ஜோடியாக நடித்த த்ரிஷா விஜய்யுடன் லியோ, கோட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என கலக்கிய நிலையில், இந்த ஆண்டு அஜித் குமாரின் மனைவியாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்து ஸ்பெஷலான நடிப்பை கொடுத்து வருகிறார். அடுத்ததாக சூர்யாவின் 45வது படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுதானா?: ஆர்ஜே பாலாஜி எப்படியாவது தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்கிவிட வேண்டும் என அவசர அவசரமாக ஒரு கதையை எழுதிக்கொண்டு போய் அவரிடம் நீட்டினார். ஆனால், ஆர்ஜே பாலாஜிக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. கார்த்திக் சுப்புராஜை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜிக்கும் சூர்யா அடைக்கலம் கொடுத்த நிலையில், சூர்யா 45 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கருப்பு சாமியாகவும் வழக்கறிஞராகவும் நடித்து வருவதாக கூறுகின்றனர். மேலும், இந்த படத்துக்கு 'வேட்டை கருப்பு' என அட்டகாசமான டைட்டிலை தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்தளவுக்கு உண்மையான டைட்டில் என்பது படக்குழு அறிவிக்கும் போதுதான் தெரிய வரும்.

பொங்கல் போட்டியில் பங்கேற்பாரா?: அடுத்த ஆண்டு பொங்கலுக்கே சூர்யாவும் போட்டியில் குதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ரெட்ரோ படம் 65 கோடியில் எடுக்கப்பட்டு 105 கோடி வரை வசூல் வந்துள்ள நிலையில், அடுத்த படம் மிகப்பெரிய பிசினஸ் செய்யும் என்கிற நம்பிக்கை சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜனநாயகன், பராசக்தி உள்ளிட்ட படங்கள் பொங்கல் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், சூர்யாவும் பங்கேற்பாரா அல்லது ஜனவரி 26ம் தேதி தனது படத்தை வெளியிடுவாரா என கேள்விகள் கிளம்பி உள்ளன. கூடிய சீக்கிரமே பாக்ஸ் ஆபீஸில் தான் விட்ட இடத்தை சூர்யா பிடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். வெங்கி அட்லூரி படம், வாடிவாசல் என வரிசையாக தரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











