போராடுவதற்கு லா எனக்கொரு வெப்பன்... வழக்கறிஞர் சந்துருவாக மிரட்டும் சூர்யா!

சென்னை : நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம்.

மறுக்கப்பட்ட நீதிக்காக பழங்குடியின மக்களுக்கு துணையாக அநியாயத்தை எதிர்த்துப் போராடும் நேர்மையான வழக்கறிஞராக சூர்யா இதில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கி இருக்க நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

சூரரைப்போற்று பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு நேரடியாக ஓடிடியில் வெளியானதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களும் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில்

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில்

இதன்படி 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஜோதிகாவின் நடிப்பில் வெளியான உடன்பிறப்பே திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.

முதல்முறையாக வழக்கறிஞராக நடித்திருப்பதால்

முதல்முறையாக வழக்கறிஞராக நடித்திருப்பதால்

அடுத்ததாக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படமும் வரும் நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இதுவரை பல கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருந்தாலும் முதல்முறையாக இதில் வழக்கறிஞராக நடித்திருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இந்த படத்தை காண ஆவலுடன் உள்ளனர்..

Recommended Video

நான் Media வில் வருவதற்கு காரணமாய் இருந்தவர் | Actor Vijay Anand Exclusive | Filmibeat Tamil
போராடுவதற்கு லா எனக்கொரு வெப்பன்

போராடுவதற்கு லா எனக்கொரு வெப்பன்

படிப்பறிவில்லாத பழங்குடியின மக்களுக்கு எதிராக சட்டத்தை தவறாக பயன்படுத்தி சட்டத்தை மீறுபவர்களை தட்டிக் கேட்கும் நேர்மையான வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா இதில் நடித்துள்ளார். விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் போக காணாமல் போன கணவரை மீட்டுத்தருமாறு போராடும் அப்பாவி பழங்குடியின பெண்ணுக்கு போராடி நீதி பெற்றுத் தரும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் ஜெய்பீம் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சூர்யாவின் வசனங்கள் ஒவ்வொன்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை ஆணித்தரமாக உரைக்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X