ரெட்ரோ ஷூட்டிங்.. மகளை நினைத்து தேம்பி தேம்பி அழுத சூர்யா.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெற்றதாகவும்; உலகம் முழுவதும் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக வாடிவாசல், வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கடைசியாக ஹிட்டான திரைப்படம் எதுவென்று அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கிறது அவரது கரியர். தியேட்டர்களில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா உள்ளிட்ட படங்கள் எல்லாம் மொரட்டு அடி வாங்கின. அதிலும் கங்குவா படத்துக்கு எப்படிப்பட்ட நிலைமை உருவானது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே தெரியும்.

ஏன் அந்த நிலைமை?: அதிக பட்ஜெட், 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் என ஏகப்பட்ட ஹைப்போடுதான் அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. அதனை பார்க்கையில் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் படத்தின் ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் பேசியதால் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை வைத்தார்கள் ரசிகர்கள். படம் படுத்துவிட்டது. ரசிகர்களோ கங்குவாவையும், சிவாவையும், சூர்யா, ஞானவேல் ராஜாவையும் ட்ரோல் செய்து படுத்தி எடுத்துவிட்டார்கள்.

Suriya cried thinking of his daughter while Retro Shooting

ரெட்ரோ: எனவே கங்குவா கொடுத்த அடியை ரெட்ரோவில் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் சூர்யா. இயக்கம் கார்த்திக் சுப்புராஜ் என்பதால் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். கடந்த ஒன்றாம் தேதி ரிலீஸான அந்தப் படமும் சுமாரன வரவேற்பைதான் பெற்றது. படத்தின் முதல் 20 நிமிடங்கள் அட்டகாசமாக இருந்தது என்றும்; அடுத்தடுத்த காட்சிகளும், திரைக்கதையும் என்ன சொல்ல வருகிறது என்றே புரியவில்லை என விமர்சனம் செய்தார்கள். விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக டீசன்ட்டான வரவேற்பை பெற்றது.

அடுத்த படங்கள்: இப்படி சூர்யாவின் நடிப்பில் தியேட்டரில் வெளியான மூன்று படங்களுமே ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த படத்திலாவது ஒரு வெற்றியை பார்த்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர். அதனை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் குடும்பம்: எந்தப் படம் மிஸ் ஆனாலும் வாடிவாசல் பந்தயம் அடிக்கும் என்ற 100 விழுக்காடு நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதற்கிடையே சூர்யாவின் மகளான தியா 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். எனவே அவர் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான திட்டத்தில் இருந்தாராம். ஆனால் அதற்கான எந்த அழைப்பும் வராததால் பொறுமையாக காத்திருந்தார் அவர்.

தேம்பி தேம்பி அழுத சூர்யா: இந்நிலையில் அவர் அமெரிக்காவில் வந்து படிப்பதற்கான அழைப்பு கடிதம் சமீபத்தில் வந்திருக்கிறது. இந்த விஷயம் சூர்யாவுக்கு ரெட்ரோ ஷூட்டிங்கில் இருக்கும்போது தெரியவந்ததாம். அதனை கேள்விப்பட்டதும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டதாகவும்; வரும் ஜூலை மாதம் தியா அமெரிக்காவுக்கு பறக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

FAQs
சூர்யாவின் மகள் பிறந்த ஆண்டு எது தெரியுமா?

2007ஆம் ஆண்டு

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X