அஞ்சான் படம் மூலம் பாடகரான சூர்யா
சென்னை: அஞ்சான் படத்திற்காக யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தை படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யா முதன் முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். சூர்யா ஏற்கனவே சன்ரைஸ் விளம்பரத்திற்காக ஜிங்கில்ஸ் பாடி நடிக்கவும் செய்துள்ளார்.

சூர்யா பாடிய பாடல்
எனவே, அவரிடம் படத்தில் பாடல் ஒன்றை பாடும்படி இயக்குனர் லிங்குசாமி கேட்டுக்கொள்ளவே யுவனின் இசையில் சூர்யாவும் பாடலை பாடியுள்ளார். துள்ளலும் துடிப்பும் நிறைந்த இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என கூறப்படுகிறது.

ஆடியோ ரிலீஸ்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வருகிற ஜூலை 17-ந் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

பாடகர்களாகும் நடிகர்கள்
கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் பாடுவதோடு மட்டுமின்றி பிற படங்களிலும் நட்புக்காக பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோச்சடையான் படத்தில் கூட ரஜினிகாந்த் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சூர்யாவின் புதிய களம்
இந்த வரிசையில் தற்போது சூர்யாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். நடிகராக, தயாரிப்பாளராக இருந்த சூர்யா அஞ்சான் படம் மூலம் இப்போது பாடகராகவும் அறிமுகமாகிறார். இந்தப் பாடலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை அடுத்தே அவர் தொடர்ந்து பாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











