தெலுங்கு ரசிகர்களையும் குஷியாக்க கிளம்பிய சூர்யா... என்ன செஞ்சிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
இந்தப் படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எதற்கும் துணிந்தவன் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா மோகனன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படம் பிப்ரவரி மாதத்திலேயே ரிலீஸ் செய்யப்படவிருந்த நிலையில், தற்போது மார்ச் 10ம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

டி. இமான் இசை
படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள பாடல்கள் சூர்யா ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

5 மொழிகளில் ரிலீஸ்
படத்தில் சூர்யாவுடன், சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தமிழில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

தெலுங்கில் டப்பிங் துவக்கம்
இந்நிலையில் தெலுங்கில் படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இந்த டப்பிங் பணிகளை சூர்யா தனது சொந்த குரலில் செய்துள்ளார். இதன்மூலம் தெலுங்கில் சூர்யாவின் ரசிகர்களை குஷியாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











