ஆர்ஜே பாலாஜி பிறந்தநாள் ட்ரீட் கன்ஃபார்மாம்.. சூர்யா ரசிகர்களுக்கு நாளை ‘கறுப்பு’ வேட்டை தான்!
சென்னை: சூர்யா, த்ரிஷாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் படத்துக்கு 'வேட்டை கறுப்பு' அல்லது 'கறுப்பு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வரும் நிலையில், நாளை அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவது தான்.
இந்நேரம் தளபதி விஜய்யின் கடைசி படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியிருந்தால் ஆர்ஜே பாலாஜி பிறந்தநாளுக்கு ஒரு அப்டேட் மற்றும் விஜய் பிறந்தநாளுக்கு இன்னொரு ஸ்பெஷல் அப்டேட் என ரசிகர்கள் அடுத்தடுத்து அப்டேட்களுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது.

ஆர்ஜேவாக தனது பணியை தொடங்கி காமெடியனாக மாறி, பின்னர் ஹீரோவாக மாறி, இன்று முன்னணி நடிகரான சூர்யாவையே இயக்கி வரும் அளவுக்கு உயர்ந்துள்ள ஆர்ஜே பாலாஜிக்கு ஹேப்பி பர்த்டே வாழ்த்துகளை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரெட்ரோ மூலம் ரிட்டர்ன்: 230 கோடி அளவுக்கு ரெட்ரோ படத்தின் மூலம் 2டி நிறுவனத்தின் உரிமையாளர்களான சூர்யா மற்றும் ஜோதிகா பெரிய லாபத்தை பார்த்துள்ளனர். மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ பாக்ஸ் ஆபீஸில் பெரிய அதிரடியை காட்டவில்லை என்றாலும், ஓடிடி விற்பனை, சாட்டிலைட் உரிமம் என ஏகப்பட்ட நான் தியேட்டரிக்கல் பிசினஸில் லாபத்தை பார்த்துள்ளனர். ரெட்ரோ திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய ட்ரிட்டாகவே அமைந்தது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், சூர்யாவின் அந்த அழகான சிரிப்பு என அனைத்துமே அட்டகாசம். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கண்டிப்பாக சிங்கம் படம் போல மீண்டும் பழைய பாக்ஸ் ஆபீஸ் பன்னீர் செல்வமாக சூர்யாவை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜிக்கு ஹேப்பி பர்த்டே: 1985ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பிறந்த ஆர்ஜே பாலாஜி நாளை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யா, த்ரிஷாவை வைத்து சூப்பராக ஒரு படத்தை இயக்கி வரும் ஆர்ஜே பாலாஜி தனது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா பட அப்டேட்டை கண்டிப்பாக ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்டாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் சூர்யா படத்தின் படப்பிடிப்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரிய ட்ரீட் கன்ஃபார்ம்: நாளை காலை 10 மணிக்கு சூர்யா 45 படத்தின் டைட்டில் அறிவிப்பு மினி டீஸராக வெளியானால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராகவும், கருப்பண்ண சாமியாகவும் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வளர்ப்பு அம்மாவாக நடித்த சுவாசிகா இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











