சூர்யா ரசிகர்கள் பயந்தது போன்றே நடந்துவிட்டது
சென்னை: சூர்யா ரசிகர்கள் பயந்தது போன்றே இன்று நடந்துவிட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட அறிவிப்பை பார்த்த சூர்யா ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சூர்யா
தீபாவளிக்கு அஜித்தின் விஸ்வாசம் வராது என்று தெரிந்து தல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மனதில் ஒரு ஓரமாக சந்தேகம் இருந்தாலும் நம்பிக்கையுடன் காத்திருந்த சூர்யா ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். என்.ஜி.கே. என்றால் என்ன என்று விளக்கம் அளித்து வெளியான போஸ்டரில் தீபாவளி ரிலீஸ் என்ற வாசகம் இல்லாததை பார்த்த போதே சூர்யா ரசிகர்கள் பதறினார்கள். அப்போது ஏற்பட்ட சந்தேகம் இன்று உறுதியாகிவிட்டது.
கோபம்
ரிலீஸ் தேதி தள்ளிப் போனது குறித்த அறிவிப்பை பார்த்த சூர்யா ரசிகர்கள் அவருக்காக மட்டும் தான் பொறுத்துக் கொள்வதாக கோபமாக ட்வீட்டியுள்ளனர்.
கிண்டல்
ஏற்கனவே நொந்து போயுள்ள சூர்யா ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள். தீபாவளிக்கு விஜய்யின் படம் நிச்சியமாக வெளியாகும் என்பதால் அவர்கள் தல, சூர்யா ரசிகர்களை கலாய்க்கிறார்கள்.
தீபாவளி
தீபாவளிக்கு என்.ஜி.கே. வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஒரு ரசிகர் இப்படி வீடியோ போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











