சூர்யாவுக்கு வில்லன் வேற யாருமில்லை.. ஆர்ஜே பாலாஜி தான்.. நாங்க நாலு பேர்.. திட்டும் ரசிகர்கள்!

சென்னை: அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட் இருக்கு வரியான்னு சூர்யா படத்தை ஆர்ஜே பாலாஜி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் கலாய்த்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

அதைவிட சிறப்பான விஷயம் என்னவென்றால் ஆர்ஜே பாலாஜி கதையை விஜய் ரிஜெக்ட் செய்த நிலையில், நாம வாய்ப்புக் கொடுப்போம் என சூர்யா வாய்ப்புக் கொடுத்தது மட்டுமின்றி அந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லன் கதாபாத்திரம் என்று தெரிந்தும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தது தான்.

Suriya fans trolls Rj Balaji and Sai Abhyankkar for Karuppu Naanga Naalu Peru Song
Photo Credit:

இந்நிலையில், சிம்பு பாட ஆர்ஜே பாலாஜியின் பேபி கண்ணன் கதாபாத்திரம் ரிவீல் சாங் நேற்று வெளியானது. அதை கேட்டதில் இருந்தே சூர்யா ரசிகர்கள் ஆர்ஜே பாலாஜியையும் சாய் அபயங்கரையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நாங்க நாலு பேர்: ஏற்கனவே சோஷியல் மீடியாவில் நாலு பேர் ஃபேன்ஸ் என சூர்யாவை ட்ரோல் செய்து வரும் நிலையில், சூர்யா படத்துல நாங்க நாலு பேரு னு பாட்டு வைக்கணும்னு ஐடியா யார் கொடுத்துருப்பா?? அவனை விட கூமுட்டை எவனும் இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இசையை விட்டுடு சாய்: "டேய் @SaiAbhyankkar ஒரு படத்துக்கு எவ்ளோ டா சம்பளம் வாங்குற,சொல்லு டா அத நான் உனக்கு பிச்சை எடுத்தாச்சு தந்துடுறேன் டா இசை ய விட்ரு டா.. இளையராஜா, புயல், யுவன், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் பாட்ட கேட்டு வளர்ந்தவன் டா நானு" என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சூர்யாவுக்கு மட்டும் இப்படி: "வீட்ல நல்ல தோசைய பூராம் புள்ளைக்கு போட்டு மீந்து போன தோசையை தூக்கி அப்பாவுக்கு கொடுக்கற மாதிரி, மத்தவங்களுக்கு நல்ல ஹிட்டு படம், பாட்டை எல்லாம் கொடுத்துட்டு சூர்யாவுக்கு மட்டும் இப்டி எதனா தள்ளி விட்டுடறாய்ங்க Directors, Music Directors எல்லாருமே.." என ஆர்ஜே பாலாஜி மற்றும் சாய் அபயங்கரை மோசமாக திட்டி ட்ரோல் செய்து வருகின்றனர்.

சாய் கிட்ட ஸாரி கேட்பீங்க: இன்னைக்கு கருப்பு படத்தின் நாங்க நாலு பேர் பாடலை கலாய்ப்பவர்கள், சாயை திட்டுபவர்கள் எல்லாம் சிம்புவோட வாய்ஸ்ல பாட்டு யங்ஸ்டர்ங்ககிட்ட செம ஹிட்டாக போகுது. கண்டிப்பாக 2 நாளில் சாய் அபயங்கரிடம் வந்து ஸாரி கேட்பீங்க என தீவிர சூர்யா ரசிகர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர். கருப்பு திரைப்படம் பல தடைகளை கடந்து மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X