சூர்யாவை ஜோக்கராக காட்டலாமா?.. கார்த்திக் சுப்புராஜ் மீது காண்டான ரசிகர்கள்.. விஜய் செம உஷார் தான்!
சென்னை: அஜித்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவமாக குட் பேட் அக்லி படத்தைக் கொடுத்து ரசிகர்களையும் தாண்டி மக்களையும் கொண்டாட வைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எழுதிய கதை என கார்த்திக் சுப்புராஜ் உருட்டியதும் சூர்யாவுக்கு ஒரு ஃபேன் பாய் சம்பவ படமாக இது அமையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
வாடிவாசல் படத்தை ஆரம்பிக்காமல் வெற்றிமாறன் தாமதம் செய்துக் கொண்டிருக்க சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி அவசர அவசரமாக நடித்து வருவதால் தான் அவருக்கு தொடர்ந்து படங்கள் சொதப்பி வருவதாக கூறுகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் சொதப்பாமல் 50-50 படத்தைக் கொடுத்தாலும் அதில், சூர்யாவை ஜோக்கர் போல கெட்டப் போட்டு காட்டியதும், அதற்கு ஏற்ப வசனங்களை எழுதி கொடுத்து பேச வைத்ததையும் தியேட்டர்களில் பார்க்கும் போதே சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி கார்த்திக் சுப்புராஜை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.
ஆரம்பத்தில் அதகளம்: ரெட்ரோ படத்தில் சூர்யா கோட் சூட் அணிந்துக் கொண்டு கல்யாணத்துக்காக மாப்பிள்ளையாக ரெடியாகி வந்து தனது எதிரிகளிடம் காதில் சிகரெட்டை வைத்துக் கொண்டு பேசும் காட்சியில் தொடங்கி கனிமா பாடல், ஜோஜு ஜார்ஜ் உடன் மோதல் என ஒரு பெரிய சிங்கிள் ஷாட் சீனில் அதகளம் படுத்தியுள்ளார் சூர்யா. ஆனால், அதன் பின்னர் அவர் சிறைக்குச் செல்ல படமும் டெட் ஸ்லோவாக பிரேக்டவுன் ஆகிவிடுகிறது.
ஜோக்கராக மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்: கங்குவாவில் சூர்யாவை ராஜாவாக காட்டுகிறேன் என காட்டுக் கத்தல் கத்தும் காட்டானாக மாற்றியிருந்தார் சிறுத்தை சிவா. ஆனால், ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு சிரிக்கவே தெரியாது என்றும் சிரிப்பு டாக்டராக அவர் அந்தமானுக்குச் செல்ல அவருக்கு ஜோக்கர் டிரெஸ் எல்லாம் போட்டு விட்டு மூக்கில் அந்த ஜோக்கர் பந்தை எல்லாம் ஒட்ட வைத்து தியேட்டர்களில் படத்தை பார்த்துக் கொண்ட அன்பான ரசிகர்களை ஆக்கிரோஷமான ரசிகர்களாக மாற்றிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா சம்பவம்: ஜிகர்தண்டா படத்தில் கேங்ஸ்டரான பாபி சிம்ஹாவை அழுகினி குமாராக மாற்றி அசிங்கப்படுத்தியது போல ரெட்ரோ படத்தில் சூர்யாவை வைத்து செய்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்றும் இடைவேளைக்குப் பிறகு படத்தை இழுவையாக கொண்டு சென்று மீண்டும் ஒரு சொதப்பலான படத்தையே சூர்யாவுக்கு கொடுத்து ரசிகர்களை கடுப்பாக்கி விட்டார்.
திட்டும் ரசிகர்கள்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு சில படங்களை தவிர பல படங்கள் பெரிதாக க்ளிக் ஆகவில்லை. ரஜினிகாந்துக்கான கதை என்றும் தளபதி படம் ஸ்டைலில் ஒரு விஷயம் செய்கிறேன் பாருங்கள் என எதற்கும் துணிந்தவன் படத்தில் பாண்டிராஜ் முருகன் வேடம் அணிய வைத்து ஆட வைத்தது போல இந்த படத்தில் மீஷோவில் ஆர்டர் செய்த ஆக்வாமேன் போல சூர்யாவை மாற்றியதை பார்த்து தியேட்டரிலேயே ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஆர்ஜே பாலாஜி என்ன செய்யப்போகிறாரோ?: கார்த்திக் சுப்புராஜ் 2ம் பாதியில் சாமி படம் ரேஞ்சுக்கு இந்த படத்தை கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி அடுத்து சூர்யாவை வைத்து சாமி படத்தையே எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ என ரசிகர்கள் பதறிப்போயுள்ளனர்.
விஜய் ரொம்ப உஷார்: கார்த்திக் சுப்புராஜ் பல முறை விஜய்க்கு கதை சொல்லியும் அவர் ஓகே சொல்லாமல் எஸ்கேப் ஆக இதுதான் காரணம் என்றும் 2ம் பாதிக்கு மேல் படத்தின் கதையை டோட்டலாக வேற ரூட்டுக்கு திருப்பி சொதப்பி விடுகிறார் கார்த்திக் சுப்புராஜ் என இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











