அந்த மனசு தான் சார் தங்கம்.. துணை நடிகரின் குழந்தைக்கு தங்க செயின் போட்ட சூர்யா.. வைரலாகும் வீடியோ!

ஹைதராபாத்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் குழந்தைக்கு சூர்யா தங்க செயின் போட்டு விடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவும் இளைய மகனான கார்த்தியும் தொடர்ந்து சினிமாவிலும் பொது வாழ்க்கையிலும் பல சேவைகளை செய்து வருகின்றனர். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏகப்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து பட்டதாரிகளாகவும் சமூகத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுபவர்களாகவும் மாற்றி வருகின்றனர்.

Suriya gifted gold chain to Suriya 46 supporting actor s one year old kid
Photo Credit:

கருப்பு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் முடிக்கப் போகிறார் என்றும் அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் படத்திற்கும் பூஜை போட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்காக ரெட்ரோ: கங்குவா படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், ரசிகர்களுக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. சூர்யா ரசிகர்களை ரொம்பவே ரெட்ரோ படம் திருப்திப்படுத்தியது. அடுத்ததாக கருப்பு படமும் பக்கா கமர்ஷியல் மாஸ் படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரொமாண்டிக் லுக்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் ரொமாண்டிக் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்றும் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வரும் நிலையில், சூர்யாவின் லுக்கும் செம ஸ்மார்ட்டாக உள்ளதை பார்த்த ரசிகர்கள் அந்த படத்துக்காக ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குழந்தைக்கு தங்க செயின்: சூர்யா 46 படத்தில் துணை நடிகராக நடித்து வரும் நடிகரின் குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் அவர் கொண்டாடிய நிலையில், அந்த குழந்தைக்கு தங்க செயின் அணிவித்து சூர்யா க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீத்து மாதவன் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தில் அவருக்கு ஜோட்யாக நஸ்ரியா நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X