கங்குவா படத்துக்காக சூர்யா வாங்கிய சம்பவளம் இவ்வளவா?.. வெளியான ஆச்சரிய தகவல்

சென்னை: கங்குவா படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. சிவா இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கங்குவா படத்துக்காக சூர்யா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான படம் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படம் உருவானது. மேலும் சிவா முதன்முறையாக பீரியட் ஜானரில் படம் இயக்குகிறார் என்பதாலும்; அண்ணாத்த படத்தின் படுதோல்விக்கு இதில் பதிலடி கொடுப்பாரா என்ற ஆவலாலும் படத்துக்கு ரசிகர்கள் காத்திருந்தார்கள். மேலும் சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

kanguva suriya

இன்று ரிலீஸ்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு படம் இன்று வெளியானது. மொத்தம் 30 மொழிகள், 10,000 திரைகள் என கங்குவா களைகட்டி வெளியானது. ஏற்கனவே படத்துக்கு ஞானவேலுவும், சூர்யாவும் சேர்ந்து மிகப்பெரிய ஹைப்பை ஏற்றிவிட்டார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய ஆவலோடு படம் பார்க்க இன்று தியேட்டருக்கு படைய்டுத்தனர் ரசிகர்கள். நிச்சயம் இந்தப் படத்தில் சிவா தரமான சம்பவமாக செய்திருப்பார் என்ற ஆர்வத்தோடும் ரசிகர்கள் இருந்தார்கள்.

நெகட்டிவ் விமர்சனம்: சூழல் இப்படி இருக்க படம் பார்த்த ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கிறார்கள். பொதுவான ரசிகர்கள்தான் இப்படிப்பட்ட விமர்சனத்தை கொடுத்தார்கள் என்று பார்த்தால்; சூர்யாவின் ரசிகர்களே படத்தை பார்த்து மிகப்பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். சம்பவம் செய்வார் என்று பார்த்தால் சூர்யாவை சிவா வைத்து செய்துவிட்டாரே என்று ஓபனாக சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஞானவேலுவும்: சிவா மட்டுமின்றி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரையும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. ஞானவேல் கொஞ்சம் வாயையும், தேவிஸ்ரீ பிரசாத் இசை என்கிற பெயரில் போட்ட சத்தத்தையும் குறைத்திருக்கலாம். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் சிவா மட்டும்தான் என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வேறு வருதா என்றும் இப்போதே பீதியுடன் ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டாரக்ள்.

சூர்யாவின் சம்பளம்: இந்நிலையில் கங்குவா படத்துக்காக சூர்யா வாங்கியிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது. அதன்படி படத்தின் மொத்த பட்ஜெட்டான 350 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்தப் படத்துக்கே இவ்வளவு சம்பளமா; இருந்தாலும் சூர்யாவுக்கும், ஞானவேலுவுக்கும் இவ்வளவு தைரியம் ஆகாது என்று இதையும் கிண்டல் செய்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X