Suriya: அல்லு சிரிஷ் திருமணத்தில் சூர்யா.. அட குடும்பத்துல ஒருத்தராவே மாறிட்டாரேப்பா.. ஜோ மிஸ்ஸிங்
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் ஜாம்பவானாக உயர்ந்து நிற்கும் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தனது புஷ்பா மற்றும் புஷ்பா 2 படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறி நிற்கிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடித்து வருகிறார். படம் மிகப்பெரிய பொருளாதார செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தம்பி அல்லு சிரிஷ் திருமணத்தை முன்னிட்டு, படப்பிடிப்புக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு நோ சொல்லி விட்டு, பம்பரமாக சுழன்று தம்பியின் திருமண வேலைகளைச் செய்து வருகிறார். இந்திய அளவிலான பிரபலங்கள் பலரும் அல்லு சிரிஷ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஏற்கனவே நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய ரிசப்ஷனில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தனது தம்பியின் திருமணத்தை வைத்துக் கொண்டு, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமண ரிசப்ஷெனிலும் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களில் இணைந்து நடித்தனர்.அல்லு சிரிஷ் திருமண கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

சூர்யா: பிரபலங்கள் பலரும் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்துகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சூர்யாவும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜோ மிஸ்ஸிங்: மணமக்களை வாழ்த்தியது மட்டும் இல்லாமல், மணமகன் அல்லு சிரிஷின் தாய் மாமனான சிரஞ்சீவியை சந்தித்து அவரிடத்திலும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் சூர்யா மிகவும் மரியாதையுடன் சிரஞ்சீவியிடம் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள். அதேபோல் மேலும் சில ரசிகர்களோ ஜோதிகாவையும் திருமணத்திற்கு கூட்டிச் சென்றிருக்கலாமே? என்றும் ஜோவை நாங்க ரொம்ப மிஸ் செய்கிறோம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











