ஜோதிகாவுடன் மீண்டும் இணைய வேண்டும்.. அது ஒரு கனவாகவே இருக்கிறது.. சூர்யா எமோஷனல்
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் தாங்கள் இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்தே காதலித்தனர். முதலில் சூர்யாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. காலம் செல்ல செல்ல மனம் மாறிய சிவக்குமார் இருவரின் திருமணத்துக்கும் பச்சை கொடி காண்பித்தார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு சிறந்த ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.இப்போது ஜோதிகாவை பற்றி சூர்யா பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அதேபோல் ஜோதிகாவும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர். இரண்டு பேரும் சேர்ந்து முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதிருந்தே இரண்டு பேரும் காதலிக்க தொடங்கிவிட்டார்கள். பிறகு வீட்டு சம்மதம் கிடைக்காததால் தங்களது திருமணத்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள்.

தியா, தேவ்: ஒருவழியாக சூர்யா தனது வீட்டு சம்மதத்தை பெற்றதையடுத்து அவர்களது திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் பெயரில்தான் 2D நிறுவனத்தையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். கோலிவுட்டின் மிகச்சிறந்த ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும் இப்போது மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
பிரச்னையா?: ஜோதிகாவும் திருமணத்துக்கு பிறகு இப்போது பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக பாலிவுட்டில் அவரது கவனம் முழுவதுமாக திரும்பியிருக்கிறது. அதன் காரணமாகத்தான் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் சிவக்குமார் வீட்டுடன் ஜோதிகாவுக்கு பிரச்னை ஏற்பட்டதுதான் மும்பையில் செட்டில் ஆக காரணம் என்றும் ஒரு வதந்தி கடந்த சில காலமாக பரவியது. ஆனால் அதையெல்லாம் சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது செயல்பாடு மூலம் மறுத்துவருகின்றனர். சமீபத்தில்கூட அமரன் படத்தை சிவக்குமாருடன் ஜோதிகாவும், சூர்யாவும் சேர்ந்து பார்த்தார்கள்.
சூர்யா பேட்டி: சூழல் இப்படி இருக்க சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஜோதிகாவும் ஒரு விழா மேடையில் அதுகுறித்து பேசியிருந்தார். இந்தச் சூழலில் கங்குவா படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய சூர்யா, "ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. அப்படி நடக்க நான் விரும்புகிறேன். மேலும் அது விரைவில் நடக்கும் என்றும் நம்புகிறேன்.
கேட்க விரும்பவில்லை: என்னையும், ஜோதிகாவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று எந்த இயக்குநரையும் நாங்கள் இருவரையும் கேட்க விரும்பவில்லை. .மாறாக அது தானாகவே நடக்க வேண்டும். ஏதோ ஒரு இயக்குநர் நாங்கள் இணைந்து நடிக்கும்படியான பொருத்தமான கதையை எங்களிடம் வந்து சொல்ல வேண்டும். அதை இந்த பிரபஞ்சம் நடத்தி வைக்கும் என்று நம்புகிறேன்"" என்றார். முன்னதாக ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











