லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் அஞ்சான்
சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார்.
இதையடுத்து அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா
லிங்குசாமி படத்தின் மூலம் சமந்தா முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

பெயர்
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தும் படத்தின் பெயர் என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் படத்திற்கு ராஜு பாய், மன்னார் அல்லது ரவுடி என்று பெயர் வைக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அஞ்சான்
சூர்யா படத்திற்கு என்ன பெயர் வைப்பார்களோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பொங்கல் பண்டிகை அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சோனாக்ஷி
அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடனம் ஆடுகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











