ட்விட்டரில் சேர்ந்த அன்றே அதிக ஃபாலோயர்கள்: சூப்பர்ஸ்டார், பவர்ஸ்டாரை அடுத்து சூர்யா
சென்னை: ட்விட்டரில் இணைந்த அன்றே அதிகமான ஃபாலோயர்களை பெற்ற தென்னிந்திய நடிகர்களில் ரஜினிகாந்த், பவன் கல்யாணுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் சூர்யா.
நடிகர், நடிகைகள் ட்விட்டரில் சேர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்நிலையில் தான் சூர்யா மகளிர் தினத்தன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார். தான் ட்விட்டரில் சேர்ந்ததை அறிவித்தும், மகளிர் தின வாழ்த்து தெரிவித்தும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சூர்யா ட்விட்டரில் சேரும் முன்பே அவரை வரவேற்று ரசிகர்கள் ட்வீட் போட்டனர்.

சூர்யா
சூர்யா ட்விட்டரில் சேர்ந்ததில் இருந்து அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

50,000
சூர்யா ட்விட்டரில் சேர்ந்த அன்று மட்டும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் ஆனது. தற்போது சூர்யாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 69.8 ஆயிரமாக உள்ளது.

சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த தினம் ட்விட்டரே அலறியது. அந்த அளவுக்கு அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாள் அவரை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரம் ஆனது.

பவன் கல்யாண்
ட்விட்டரில் சேர்ந்த அன்றே அதிகமான ஃபாலோயர்களை பெற்ற தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த். அவரை அடுத்து தெலுங்கு நடிகர் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் ட்விட்டரில் சேர்ந்த அன்றே அதிகபட்சமாக 91 ஆயிரம் ஃபாலோயர்களை பெற்றார்.

சிங்கம்
சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார் ஆகியோரை அடுத்து ட்விட்டரில் சேர்ந்த அன்றே அதிகமான ஃபாலோயர்களை பெற்ற தென்னிந்திய நடிகர் சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











