அரசியலுக்கு நோ.. 5 ரூபாய் டாக்டராக நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கப் போறாரா சூர்யா?.. பெரிய நிறுவனம்!
சென்னை: விஜய் முதலமைச்சரான நிலையில், சினிமாவில் இருந்து அடுத்ததாக சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவின. சூர்யா ரசிகர்களே சிலர் சூர்யா அரசியலுக்கு வரப்போவது உறுதி என பேசத் தொடங்கிய நிலையில், சூர்யா அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அகரம் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்வார் என சூர்யா தரப்பு அதிரடி விளக்கம் அளித்துள்ளது.
கங்குவா ஆடியோ லாஞ்சின் போது விஜய்க்கு எதிராக சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என நடிகரும் திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் பேச, அங்கேயே ஆர்ஜே பாலாஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது கருப்பு படம் பார்த்த உடனே ரசிகர்கள் புரிந்துக் கொண்டிருப்பார்கள்.

ஜித்து மாதவன் படம் விரைவில் முடிய உள்ள நிலையில், சூர்யா அடுத்ததாக ஹோம்பலே தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் 5 ரூபாய் டாக்டராக நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது சூர்யா - ஹோம்பலே படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே 190 கோடி: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் உலகளவில் 340 கோடி வசூலை ஈட்டிய நிலையில், தமிழ்நாட்டிலேயே 192 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. ஓடிடியில் வெளியான நிலையிலும், அமேசான் பிரைமுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு மெகா பிளாக்பஸ்டர் படமாகவும் கருப்பு மாறியுள்ளது என்கின்றனர். ரஜினிகாந்த், விஜய்க்கு அடுத்து சூர்யா டயர் 1 இடத்தை பிடித்த நிலையில், அவரது சம்பளமும் அசுர வேகத்தில் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர்.
100 கோடி சம்பளம்: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படமே 200 கோடி வசூலை மட்டுமே ஈட்டிய நிலையிலும், அஜித் சம்பளமாக மட்டுமே 180 கோடி ரூபாய் கேட்பதாக பஞ்சாயத்துக்கள் வெடித்த நிலையில் தான் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்கின்றனர். சூர்யா தமிழ்நாட்டிலேயே ஜெயிலர் பட வசூலை முந்திய நிலையில், ஹோம்பலே நிறுவனம் சூர்யாவுக்கு அதிகபட்சமாக 100 கோடி வரை சம்பளம் தர சம்மதித்துள்ளதாக கூறுகின்றனர். 5 ரூபாய் டாக்டராக நடிக்க 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போகிறாரா சூர்யா என்பது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.
அடிச்சு தூக்கு சாமி: கருப்பு படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு வெகு விரைவில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அந்த படம் சக்கைப் போடு போட்டால், அடுத்து ஜித்த மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்கும் 'சரவெடி' என தகவல்கள் வெளியான படம் தமிழ்நாடு, கேரளாவில் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் என்பது உறுதி. இந்நிலையில், ஹோம்பாலே நிறுவனத்துடன் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பான் இந்தியா படமாக மாறும் என்கின்றனர்.
கயாடு லோஹர் ஹீரோயின்: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். மேலும், கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஹோம்பாலே நிறுவனம் தெரிவித்துள்ளது. கோலிவுட்டில் சீக்கிரமே விஜய் இடத்தை சூர்யா நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications