சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி வெளியிட்ட அருண் விஜய்யின் பார்டர் டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை: "ஒரு எதிரியை உருவாக்கி அழிப்பது தேசபக்தி இல்லை" என்கிற அழுத்தமான வசனத்துடன் தெறிக்கிறது அருண் விஜய்யின் பார்டர் டிரைலர்.
'குற்றம் 23' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் அறிவழகன் உடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் அருண் விஜய்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் தற்போது இந்த டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

ஈரம் இயக்குநர்
ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 என ஏகப்பட்ட சிறந்த படங்களை உருவாக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

பார்டர்
அருண் விஜய் வரிசையாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அருண் விஜய்யின் 31வது படமாக உருவாகி வரும் பார்டர் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்டேஃபி பாட்டேல் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளனர்.

சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய மூவரும் இணைந்து தற்போது அருண் விஜய்யின் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமான பார்டர் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பார்டர் டிரைலர் பட்டையை கிளப்புது.

டிரைலர் எப்படி இருக்கு
இந்தியாவின் ஸ்பெஷல் சீக்ரெட் ஏஜென்ட்டாக அருண் விஜய் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இருவரும் நடித்துள்ளனர். விஷாலின் ஆக்ஷன் படத்தில் வருவது போலத்தான் கதை நகர்ந்தாலும் இந்த படத்தின் மேக்கிங் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் மிரட்டுகிறது. இஸ்லாமிய மாணவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதற்கு சர்ச்சைகள் நிச்சயம் கிளம்பும் என்றே தெரிகிறது. ஆனால், டிரைலரின் கடைசி வசனங்கள் அரசியல்வாதிகளின் சுய ரூபத்தை வெளிச்சப்படுத்தி காட்டுகிறது.
தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர்
"ஒரு எதிரியை உருவாக்கி அழிப்பது தேசபக்தி இல்லை" என்கிற பவர்ஃபுல்லான வசனம் பார்டர் படத்தின் அதிரடியான டிரைலரின் முடிவில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் நாள் எந்தவொரு ஆக்ஷனும் வேண்டாம் என சொல்லும் வசனங்களும் அரசியல்வாதிகளால் தான் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர் என்பதை தெளிவாக விளக்கும் விதமாக உள்ளது. ரிலீஸ் தேதி குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஃபேமிலி மேன்
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அப்படியே மனோஜ் பாஜ்பாயின் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் சாயல் தெரிகிறதே என்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஹரியுடன் யானை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் யானை படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சூர்யாவை வைத்து சிங்கம் 1,2,3 எடுத்த ஹரி அருண் விஜய்யை வைத்து எத்தனை யானை பாகங்களை எடுக்கப் போகிறார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











